Elon Musk: "முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவேன் " - எலான்மஸ்க் அதிரடி அறிவிப்பு..!
முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது.
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முக்கிய விவகாரங்களில் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகளின் அடிப்படையில் முடிவு எடுத்து வருகிறார் மஸ்க்.
வாக்குப்பதிவு நடத்திய மஸ்க்
அதன்படி, ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படாலாமா என கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகள் அடிப்படையில் அவரின் கணக்கின் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப்பெறப்பட்டது. ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்விட்டரில் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டரின் பக்கத்தில், "ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? கருத்துக்கணிப்பு முடிவுகளை பின்பற்றுவேன்" என அவர் பதிவிட்டிருந்தார். அதில், தற்போது வரை, பதவி விலக வேண்டும் என 57.2 சதிவிகித்தனர் வாக்களித்துள்ளனர். பதவி விலகக் கூடாது என 42 சதவிகிதத்தினற் வாக்களித்துள்ளனர்.
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? கருத்துக்கணிப்பு முடிவுகளை பின்பற்றுவேன்" என அவர் நேற்றுமு முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விலக தயார்?
பயனர்களின் வாக்குப்பதிவை அடுத்து, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு அறிவிப்பை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ”ட்விட்டர் பொறுப்புகளை ஏற்க கூடிய முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகுவேன்" என தெரிவித்துள்ளார்.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022
மேலும் அவர் கூறியதாவது, ”புதிய சி.இ.ஓ. வந்ததும் சாப்ட்வேர், சர்வர்ஸ் டீம்களை நான் கவனிப்பேன் எனவும் தெரிவித்தார். ட்விட்டரின் தலைமை பொறுப்பிலிருந்து விலக பயனர்கள் 57 சதவீத ஆதரவு தெரிவித்த நிலையில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.