மேலும் அறிய
Advertisement
Covid19 homeTest kit: இரண்டு நிமிடங்கள் போதும் வீட்டிலேயே கொரோனா டெஸ்ட்; செலவு வெறும் ரூ.250!
5 முதல் 7 நிமிடங்களில் டெஸ்ட் பகுதியில் அழுத்தமான கோடு உருவாகும், ஒருவேளை தொற்று இல்லாவிட்டால் கோடு வராது...
கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டாலும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்போனா அங்க வரும் பாசிட்டிவ் நோயாளிகளால் தொற்று ஏற்படுமோ என்ற பயத்திலேயே பாதி பேர் பரிசோதனையை தள்ளிப்போட்டு விடுகின்றனர். இதுவே தொற்று அதிகமாகக் காரணமாகிவிடுகிறது. இந்நிலையில், லேசான அறிகுறி தெரிந்தவுடனேயே வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய மருத்துவ உபகரணத்தை புனேவைச் சேர்ந்த மைலேப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த கிட் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) ஒப்புதலையும் பெற்றிருக்கிறது.
சரி, டிவியில் கொரோனா பரிசோதனை செய்ய செவிலியர்கள் நீண்ட குச்சியை மூக்கில் நுழைப்பதைப் பார்ப்பதே பீதியாக இருக்கிறதே. அதை எப்படி நாமே செய்துகொள்வது என நீங்கள் கேள்வி எழுப்புவது புரிகிறது. இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எப்படி சோதனை செய்வது? மைலேப் டிஸ்கவர் சல்யூஷன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பேத்தோ கேட்ச் (PathoCatch) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிட்டை மருந்துக் கடைகளில் ரூ.250 செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
இந்தக் கிட்டில் 4 பொருட்கள் இருக்கும். நீங்கள் எல்லோரும் பார்த்து பயப்படும் நேஸல் ஸ்வேப் (மூக்கில் செலுத்தும் பஞ்சு நுணி கொண்ட குச்சி), மருந்து நிரப்பப்பட்ட டியூப், டெஸ்ட் பேட், மருத்துவக் கழிவுகளை அகற்றும் பை. நீங்க கிட்டை வாங்கிட்டு வந்ததும், Mylab Coviself செயலியை மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். அதிலும் உங்களுக்கு கிட்டைப் பயன்படுத்தும் அறிவுரைகள் கிட்டும்.
சரி, கிட்டிலிருந்து நேஸல் ஸ்வேப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரண்டு நாசித் துவாரங்களிலும் நேஸல் ஸ்வேப்பை குறைந்தது 5 முறையாவது லேசாக சுழற்றுங்கள். மாதிரிகளை சேகரித்துக் கொண்டு திரவம் நிரப்பிய டியூபில் அதை செலுத்துங்கள். எஞ்சிய ஸ்வேப் பகுதியை உடைத்து பயோஹசார்ட் பையில் போட்டுவிடவும். இப்போது. சேகரிக்கப்பட்ட மாதிரியில் இரண்டு சொட்டுகளை டெஸ்ட் பேடின் கன்ட்ரோல் பகுதியில் விடவும். உங்களுக்கு கரோனா தொற்று இருந்தால், 5 முதல் 7 நிமிடங்களில் டெஸ்ட் பகுதியில் அழுத்தமான கோடு உருவாகும். ஒருவேளை தொற்று இல்லாவிட்டால் கோடு வராது. 15 நிமிடங்களுக்குள் கிடைப்பதே உண்மையான முடிவு. அதன்பின் கிடைக்குப்பெறும் முடிவை நிராகரித்துவிடலாம். மீண்டும் சோதித்துக் கொள்ளுங்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனையோடு ஒப்பிட்டால் பரிசோதனையில் ஃபால்ஸ் நெகட்டிவ் முடிவு வர சற்றே கூடுதல் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உடலில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பின், டெஸ்ட் முடிவு நிச்சயமாக சரியானதாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்படியாக வீட்டிலேயே நீங்கள் சோதனை செய்து கொண்டு முடிவின் அடிப்படையில் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களுடன் பேசி அடுத்தக்கட்ட சிகிச்சையை முடிவு செய்யலாம். இந்தப் பரிசோதனையை நீங்கள் செய்ய 2 நிமிடங்கள்தான் ஆகும். முடிவை அதிகபட்சமாக 15 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனை ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் Rapid Antigen Test (RAT) அடிப்படையில் செய்யப்படுகிறது. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க. டெஸ்ட் முடித்தவுடன் பயோ ஹசார்ட் அகற்றும் பையில் உபகரணங்களை டிஸ்போஸ் செய்யுங்கள். அதேபோல் பாசிட்டிவ் என முடிவு வந்தால் உடனே உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion