காரைக்காலை அச்சுறுத்தும் காலரா! 1000க்கும் அதிக பாதிப்பு - 2 பேர் பலி!
காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரைக்காலில் காலரா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் காரணமாக, புதுச்சேரியில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திடீரென காலரா பரவி வருவதாலும், இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
காரைக்காலில் காலரா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக, புதுச்சேரியில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திடீரென காலரா பரவி வருவதாலும், இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
முன்னதாக, புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்து வந்தது. இதையடுத்து, நிலைமையின் தீவிரத்தை அறிந்த சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர். அப்போது, பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் ஆரோக்கியமற்றதாக உள்ளது.
மேலும், மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கும் காலரா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, காரைக்காலில் மட்டும் சுமார் 1,589 பேருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாாகியுள்ளனர். புதுச்சேரி முழுவதும் காலரா தொற்று பரவியிருப்பதை அறிந்த சுகாதாரத்துறை இன்று மாநிலம் முழுவதும் பொது சுகாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
காலரா தொற்றை தடுக்கும் நோக்கத்தில் தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும், தண்ணீரை தூய்மையாக பயன்படுத்தவும் தொடர்ந்து அந்த மாநில சுகாதாரத்துறை விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலரா பரவலைத் தடுக்கும் நோக்கில் அந்த மாநில சுகாதாரதக்குழு, நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் இணைந்து தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் இனி வரும் நாட்களில் கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும், சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவவும், காய்களை நன்றாக கழுவி, வேகவைத்து சமைத்து சாப்பிடவும் அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காலரா பாதிப்பு பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் காலரா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்