Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
India Pak China: இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

India Pak China: இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
”பாகிஸ்தானை வளர்த்துவிடும் சீனா”
உலக அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இந்தியாவை தங்களுக்கு தொடரும் ஒரு அச்சுறுத்தலாகவே பாகிஸ்தான் கருதுகிறது. இதன் காரணமாக தங்கள் ராணுவத்தை நவீனமயமாக்க தொடர்ந்து பாடுபடும். இந்தியாவின் ராணுவ வலிமையை ஈடுசெய்ய தங்களது போர்க்களம் மற்றும் அணு ஆயுத வலிமையை மேம்படுத்த முயற்சிக்கும். பாகிஸ்தான் கிட்டத்தட்ட நிச்சயமாக வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து பேரழிவு ஆயுதங்களுக்கு பொருந்தக்கூடிய பொருட்களை வாங்குகிறது. இவை பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வாங்கப்படுகின்றன. இதுபோக ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாகவும் பாகிஸ்தனை வந்தடைகின்றன. சீனாவிடம் இருந்து பொருளாதாரா மற்றும் ராணுவ உதவிகளை தாராளமாக பெறும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டுடன் சேர்ந்து ராணுவ பயிற்சிகளில் ஈடுபடுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வலுவடைய சீனா தொடர்ந்து உதவி வருகிறது” என எச்சரித்துள்ளது.
”சீனா தான் பிரச்னையே”
தொடர்ந்து, “இந்தியாவை பொறுத்தவரை சீனா தான் பிரதான எதிரி. மே மாதம் எல்லை தாண்டி இருநாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டாலும் பாகிஸ்தானை அதிகபட்சமாக தாங்கள் கையாளும் துணை பாதுகாப்பு பிரச்னையாகவே மத்திய அரசு கருதுகிறது. தற்போதைய சூழலில் சீனாவிடம் 600-க்கும் அதிகமான அணு ஆயுத ஏவுகணைகள் இருக்கின்றன. 2030ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை எந்த சூழலிலும் உடனடியாக பதிலடி அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்படும்” என அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைகள் என்ன?
இந்திய பெருங்கடல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நான்கு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ சீனாவின் தாக்கத்தை குறைக்கவும், தங்களது சர்வதேச தலைமைத்துவத்தை மேம்படுத்தவும் கூட்டு ராணுவ பயிற்சி, ஆயுதங்கள் விற்பனை மற்றும் தரவுகளை பகிர்வது போன்ற பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. உள்நாட்டிலேயே பாதுகாப்பு நிறுவனங்களை ஏற்படுத்த மேட் இன் இந்தியா திட்டத்தை நடப்பாண்டில் ஊக்குவிக்கும். இதுபோக சீனாவை எதிர்கொள்ள அணு ஆயுதத்தை ஏந்தி செல்லக்கூடிய அக்னி -1 மீடியம் ரேஞ்ச் ஏவுகணை மற்றும் பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடிய அக்னி - V ஏவுகணையை கடந்த ஆண்டு சோதித்துள்ளது. அணு ஆயுத சக்தி கொண்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பலையும் (ஐஎன்எஸ் அரிகட்) பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது”என அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே அண்மையில் வெடித்த போர் பதற்றம் தற்போது தான் மெல்ல மெல்ல தனிய தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வெளியாகியுள்ள அமெரிக்காவின் அறிக்கை, இந்தியாவின் அண்டை நாடுகள் நமக்கு எப்படி ஆபத்தானவையாக உள்ளன என்பதை எடுத்துரைக்கிறது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மோசமாக உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.





















