மேலும் அறிய

குடியரசு தலைவர் தேர்தல்...எதிர்க்கட்சியினர் கூட்டத்தை புறக்கணித்த கேசிஆர்...ஆம் ஆத்மியின் நிலை என்ன?

காங்கிரஸ் கட்சியுடன் மேடையை பகிர்ந்து கொள்வதற்கான கேள்விக்கே இடம் இல்லை என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம், குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை கூட்டம் கூட்டியுள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 

பாஜகவை தோற்கடிப்பதை இலக்காக கொண்டுள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர் ராவ், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்பட்டதற்கு அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அதேபோல, இந்த கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தை புறக்கணித்திருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஆர்எஸ், "காங்கிரஸ் கட்சியுடன் மேடையை பகிர்ந்து கொள்வதற்கான கேள்விக்கே இடம் இல்லை" என கூறியுள்ளது. ஆட்சேபனை தெரிவித்த பிறகும் காங்கிரஸ் கட்சி அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள டிஆர்எஸ், "சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சிக்காமல் டிஆர்எஸ் அரசை குறிவைத்து பேசினார். குறிப்பாக, சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது. 

அந்த வகையில், எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் டிஆர்எஸ் உடன்படவில்லை. இந்நிலையில், ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்து, வேட்பாளரின் கருத்து கேட்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்யப்பட்டது? கூட்டங்களை நடத்தி, ஒருமித்த கருத்துக்கு வந்து, வேட்பாளரின் ஒப்புதலைப் பெற்று, கூட்டத்திற்குப் பிறகு பெயரை அறிவிப்பதே சரியான நடைமுறையாக இருந்திருக்கும்" என டிஆர்எஸ் சாடியுள்ளது.

பல முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் கூறுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை எதிர்க்கும் வகையில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 22 அரசியல் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை அவர் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், எதிர்கட்சியினரின் குடியரசு தலைவர் வேட்பாளராக சரத் பவார் அறிவிக்கப்படுவாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட சரத் பவார் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிக்கு தேவையான ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிவடையவுள்ள போட்டியில் இறங்க அவர் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அவரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவும் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தை புறக்கணித்துள்ள ஆம் ஆத்மி, "குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே, இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிரிகளாக கருதப்படும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Embed widget