மேலும் அறிய

Budget 2024: நாளை பட்ஜெட்! வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி உறுதி

நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மக்களுக்கு அளித்த உறுதிகளை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்:

அப்போது, அவர் கூறியதாவது,” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு நடைபோடும். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.

நாட்டு மக்களுக்கு நான் உத்தரவாதம் அளித்து வருகிறேன். அதை களத்தில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இந்த பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது பாரதத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும்.

மக்களுக்காக அர்ப்பணிப்பு:

ஜனவரி மாதம் முதல் இதுவரை எவ்வளவோ போராடினோம். ஆனால், தற்போது அந்த காலம் முடிந்து பொதுமக்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று நாட்டின் அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான மேடையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 2029 தேர்தலின்போது நீங்கள் எந்த விளையாட்டையும் விளையாடலாம். ஆனால், அதுவரை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அதிகாரம் பெற நாங்கள் வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த பா.ஜ.க. நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் உதவியுடன் ஆட்சியை 3வது முறையாக பிடித்தது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மோடி அரசு தங்களது 3வது ஆட்சியில் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வட இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பருவகால இழப்புகள், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்று இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்நது வருகிறது. இதனால், சாமானியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா? என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்திலா? நாடு முழுவதும் பரவியுள்ளதா? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

மேலும் படிக்க: RSS: அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் - 1966ல் விதித்த தடையை நீக்கிய மத்திய அரசு

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget