Breaking Live: கலாஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது - உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
கலாஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது - உயர்நீதிமன்றம்
கலோஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒடிசா முதலமைச்சருக்கு நெருக்கமான வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீச்சு
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசப்பட்டுள்ளது.
Breaking Live: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது..
பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் 19 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சரின் பதிலுரை முடிந்து சட்டப்பேரவை நிறைவுபெற்று, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Breaking Live: சாதிவாரி கணக்கெடுப்பு.. அதிமுகவை தொடர்ந்து பாமக வெளிநடப்பு..
சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசும் போது அதிமுகவை தொடர்ந்து பாமகவும் வெளிநடப்பு செய்தது.
Breaking Live: உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு செயலி - தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தகவல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி செயலி ஏற்பாடு செய்யப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

