புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தல்- குறி வைத்த பாஜக...! - மௌன புன்னகை வீசும் என்.ரங்கசாமி..!
’’பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் அளித்தனர். அதை வாங்கிக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, படித்துப் பார்த்து விட்டு புன்னகைத்தார். பதில் ஏதும் கூறவில்லை’’
புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட முடிவெடுத்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமியிடம் அளித்தனர். புதுவை மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கோகுல கிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 15ஆம் தேதி தொடங்கியது. 22ஆம் தேதி மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.
KC Veeramani: பீடி கம்பேனி நடத்திய கே.சி.வீரமணி பில்லினியர் ஆனது எப்படி..?
Thirumavalavan: அதிமுகவின் ஊழல் ஆட்சி ஊருக்கே தெரியும் - திருமாவளவன்
இன்னும் 4 நாட்களே மனு தாக்கல் செய்ய காலம் உள்ளது. ஆனால், இதுவரை என்ஆர்.காங்கிரஸ், பாஜகவில் தேர்தலில் போட்டியிடுவது யார்? என முடிவு செய்யப்படாமல் உள்ளது. இரு கட்சிகளும் மாநிலங்களவை எம்.பி.யை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. பாஜகவை பொறுத்தவரை மாநிலங்களவையில் கட்சியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஹோட்டல் அக்கார்டில் நடந்தது.
மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவியன் ரிச்சர்ட், ஆதரவு தரும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பங்கேற்றனர். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவியைக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கித் தர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ADMK Supporters Update: சன் செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர்! பரபரப்பான வீரமணி வீடு!
பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில், "அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தல்படி வரும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்துகிறது. இதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து முதல்வரைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் அளித்தனர். அதை வாங்கிக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, படித்துப் பார்த்து விட்டு புன்னகைத்தார். பதில் ஏதும் கூறவில்லை.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை அங்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. இதில் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த என்.ரங்கசாமி இருந்தாலும், அமைச்சரவையில் பாஜகவின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இருக்கட்சிகளுக்கும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் யார் பெரியவர் என்கின்ற போட்டி திரைமறைவில் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.