மேலும் அறிய

லாட்ஜில் ‛உள்ளே வெளியே’ விளையாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

குஜராத்தில் தனியார் விடுதியில் சூதாடிய பா.ஜ.க. எம்,எல்.ஏ. உள்பட 25 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது பஞ்சமகால் மாவட்டம். இந்த மாவட்டத்தில் கோத்ரா – பவகாத்  சாலையில் அமைந்துள்ளது ஜிம்மி கிளப் என்ற தனியார் விடுதி. இந்த விடுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பவகாத் குற்றப்பிரிவு போலீசார் அந்த இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த விடுதியில் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர்களிடம் ஏராளமான மதுபாட்டில்களும் இருந்தன. இதையடுத்து, சூதாட்ட விடுதியில் சூதாடிக்கொண்டிருந்த 25 நபர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 25 நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று காத்திருந்தது.


லாட்ஜில் ‛உள்ளே வெளியே’ விளையாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

கைது செய்யப்பட்ட 25 நபர்களில் இருந்த கேஷரிசிங் சோலங்கி என்பவர் எம்.எல்.ஏ. என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. பா.ஜ.க. எம்.எல்,.ஏ.வான அவர் அந்த மாநிலத்தில் உள்ள மாதர் என்ற தொகுதியில் இருந்து அந்த மாநில சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். தனியார் விடுதியில் சூதாடிய இடத்தில் போலீசார் ரூபாய் 5 லட்சத்து 81 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 8 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

சொகுசு கார்களான அந்த 8 வாகனங்களின் மதிப்பு ரூபாய் 8 கோடியே 6 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட அனைவருக்கும் போலீசார் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.


லாட்ஜில் ‛உள்ளே வெளியே’ விளையாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

இந்த நிலையில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினரே இவ்வாறு சூதாட்டம் ஆடியதற்காக கைது செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது விஜய் ரூபானி அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மாநில எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக குஜராத் மாநில முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜக எம்.எல்.ஏ., கைதாகியிருப்பது அங்கு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget