Nitish Kumar: பீகார் சட்டசபையில் சர்ச்சை பேச்சு - பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்
Nitish Kumar: சட்டசபையில் பேசிய தனது பேச்சு சர்ச்சையான நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
Nitish Kumar: சட்டசபையில் பேசிய தனது பேச்சு சர்ச்சையான நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
#WATCH | Bihar CM Nitish Kumar says, "I apologise & I take back my words..." pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023
இதுதொடர்பாக பேசிய அவர், எனது பேச்சுக்கு மன்னிப்பு கோருகிறேன், எனது வார்த்தைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை நான் கூறவில்லை. எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது வார்த்தைகள் மக்களை புண்படுத்தியிருந்தால் எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கருவுறுதல் விகிதம் குறைவதைப் பற்றி விளக்கவே நான் முயற்சித்தேன். நான் எப்போதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறேன். நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என நிதிஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: மைலேஜில் அசத்தும் பெட்ரோல் கார்கள் - ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இப்படி ஒரு ஓட்டமா..!
சர்ச்சைக்குள்ளான நிதிஷ்குமாரின் பேச்சு:
பீகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய நிதிஷ்குமார், “பீகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார். இதோடு, கணவன் - மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களையும் பேசினார்.
குவிந்த கண்டனங்கள்:
கணவன் - மனைவி இடையேயான அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர். ”இந்திய அரசியல் வரலாற்றில், நிதிஷ் குமார் போன்ற அநாகரீகமான தலைவர் யாரும் இல்லை” என, பீகார் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. நிதிஷ் குமார் மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மகளிர் ஆணையமும் வலியுறுதியது. சமூக வலைதளங்களிலும் நிதிஷ்குமாரின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. அதேநேரம், “நிதிஷ்குமாரின் கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக தான் அவர் விளக்க முயன்றுள்ளார்” என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் தான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுவதகாவும், யாரையேனும் புண்படுத்தி இருந்தல் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்” நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.