காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில்நிலையங்களில் வைஃபை வசதி - ரயில் டெல் நிறுவனம் சாதனை!
ஏற்கெனவே, ஜம்மு பிரதேசத்தில் கத்துவா, புதி, சான் அரோரியான், ஹிராநகர், ககுவால், சம்பா, விஜய்பூர், பாரி பிரமன், ஜம்முதாவி, பஜல்தா, சங்கர், மன்வால், ராம்நகர் ஆகிய 15 தொடர்வண்டி நிலையங்களில் வைஃபை இணைய வசதி அமைக்கப்பட்டு விட்டது.
காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் பள்ளத்தாக்குப் பகுதியில், ஸ்ரீநகர் முதலிய அனைத்து 15 தொடர்வண்டி நிலையங்களும் இந்திய ரயில்வேயின் வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வசதியைப் பெற்றுள்ள 6ஆயிரத்து 21 தொடர்வண்டி நிலையங்களுடன் இவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா, அம்ரே, பத்தான், மசோம், பட்காம், ஸ்ரீநகர், இராம்பூர், பாம்பூர், காகப்போரா, அவந்திபுரா, பஞ்சம், பிஜ்பெகரா, அனந்த்நாக், சதுரா, குவாசிகண்ட், பனிகல் ஆகிய இந்த தொடர்வண்டி நிலையங்கள், ஸ்ரீநகர், பட்கோன், பனிகல், குவாசிகண்ட் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவை. ஏற்கெனவே, ஜம்மு பிரதேசத்தில் கத்துவா, புதி, சான் அரோரியான், ஹிராநகர், ககுவால், சம்பா, விஜய்பூர், பாரி பிரமன், ஜம்முதாவி, பஜல்தா, சங்கர், மன்வால், ராம்நகர் ஆகிய 15 தொடர்வண்டி நிலையங்களில் வைஃபை இணைய வசதி அமைக்கப்பட்டு விட்டது.
தொடர்வண்டி நிலையங்களில் கிடைக்கும் இந்த இணைய வசதிக்குப் பெயர், ரயில்வயர். ரயில்டெல் நிறுவனம் மூலம் இந்திய ரயில்வேயானது பொதுமக்களுக்கு இந்த வைஃபை இணைய வசதியை அளித்துவருகிறது. தொடர்வண்டி நிலையங்களின் நடைமேடை முழுவதையும் டிஜிட்டல் வசதியைக் கொண்டதாக மாற்றியமைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நாட்டில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்களில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ரயில் வயர் இணைய வசதி, உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப்பெரிய வைஃபை வலைப்பின்னல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
இந்த வசதி தொடங்கப்பட்டதை முன்னிட்டு ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் ஊரகப் பகுதிகளுக்கும் நகர்ப்பகுதிகளுக்கும் இடையில் டிஜிட்டல் இடைவெளி இருக்கும் நிலையில், மக்களை இணைக்கும் பாலமாக வைஃபை வசதி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ரயில்டெல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய ரயில்வேயானது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பகுதிகளுக்கும் அதிவிரைவு வைஃபை வசதியை வழங்கும் பணியில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. உலக வைஃபை நாளான இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து தொடர்வண்டி நிலையங்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தியதன் மூலம் அனைத்து நிலையங்களுக்கும் வைஃபை வசதி வழங்கியுள்ளதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தில் இது ஓர் முக்கிய செயல்பாடு என்பதுடன், இணைய வசதி இல்லாதவர்களுக்கு அதை ஏற்படுத்துவதுவரை நீண்ட தொலைவு பயணம் செய்யவேண்டி உள்ளது. இந்த சிறப்பான சாதனையை நிகழ்த்தியதற்காக கடுமையாக உழைத்த இந்திய ரயில்வே மற்றும் ரயில் டெல் குழுவினர்களைப் பாராட்டுகிறேன்.” என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
முன்னர், ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு- காஷ்மீரை, 2019 அக்டோபர் 30 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப்பிரதேசங்களாக மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.