(Source: ECI/ABP News/ABP Majha)
இந்த மாதத்துடன் 5ஜி சேவையை தொடங்கும் ஏர்டெல்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
மொபைல் போன் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களிலேயே, மொபைல் போன் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இணைப்பு மற்றும் நாடு தழுவிய சேவையில் எரிக்சன் மற்றும் நோக்கியாவுடன், ஏர்டெல் நீண்டகாலமாக கூட்டணி வைத்துள்ளது. இச்சூழலில், நோக்கியாவுடனான கூட்டணி இந்தாண்டின் மூலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bharti Airtel bids for 5G spectrum worth Rs 43,084 crore; Vodafone Idea bids for airwaves worth Rs 18,784 crore: Telecom Minister
— Press Trust of India (@PTI_News) August 1, 2022
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை வாங்கியுள்ளது. இதன் மூலம், அதன் ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங்கை மேம்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை வாங்கிய பாரதி ஏர்டெல், இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்துவதற்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருந்தது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல் கூறுகையில், "ஏர்டெல் 5ஜி சேவைகளை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெட்வொர்க் ஒப்பந்தங்கள் முடிவடைந்துவிட்டது. நுகர்வோருக்கு 5ஜி இணைப்பின் முழுப் பலன்களை வழங்க ஏர்டெல் உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மாற்றம் தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தப்படும். தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் சமூக-பொருளாதாரத்தை டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி இயக்க இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.
பல கூட்டாளர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஏர்டெல்லுக்கு அதிவேக, குறைந்த தாமதமான, பெரிய டேட்டா கையாளும் திறன்களைக் கொண்ட 5G சேவைகளை வெளியிட உதவும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்திய நாடு முழுவதும் தொலைத்தொடர்பு துறையில் தற்போது 4 ஜி (நான்காவது தலைமுறை) சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக 5 ஜி (ஐந்தாவது தலைமுறை) அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
5 ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தால், இணையதள வேகம் தற்போதைய வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5 ஜி சேவை, முக்கியமான மெட்ரோ நகரங்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்