Prakash Raj on BJP: ”நானே நடிகன்; எங்ககிட்ட நடிக்காதீங்க; மோடி இன்னொரு ஹிட்லர்” - பாஜகவை சரமாரியாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் தொகுப்பை பார்க்கலாம்.
தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கு பெற்றார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களையும் காணலாம்.
கேள்வி: இந்த 9 ஆண்டுகால ஆட்சி எப்படி இருக்கிறது?
பதில்: ஆட்சி எங்கே நடக்கிறது? கூத்து தானே நடக்கிறது.
கேள்வி: 9 ஆண்டுகால ஆட்சிக்கு ஒரு மதிப்பீடு கொடுக்க வேண்டும் என்றால் என்ன மதிப்பீடு கொடுப்பீர்கள்?
பதில்: சொன்னது என்ன செஞ்சது என்னனுதான் நாம் பார்க்கணும். அவரை பிரதான் மந்திரி என்று சொல்வதா? பிரச்சார மந்திரி என்று சொல்வதா என தெரியவில்லை. பேச்சு சுதந்திரம் இல்லை. ராணுவ ஆட்சி இல்லை என்றாலும், இன்னொரு ஹிட்லரை தானே பார்க்கிறோம்.
கேள்வி: புதிய நாடாளுமன்றம் பிரம்மாண்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நாடாளுமன்றம் பிரம்மாண்டமாய் இருப்பது வேண்டுமா? அல்லது மூன்றாயிரம் கோடிக்கு சிலை வேணுமா? விலைவாசி கட்டுப்படுத்துதல், மருத்துவமனை வசதி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேணுமா? ஒரு தலைவன், அது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர் வீட்டில் ஹோமம் செய்து கொள்ளட்டும். இது மக்களின் சொத்து. அந்த பவர் மக்கள் கொடுத்த பொறுப்பு. ஒரு குடியசுத் தலைவரை கூப்பிடவில்லை. ஆதிவாசி என்பதாலா? தீண்டதகாதவரா நாங்கள்? அது என்ன திடீரென தமிழ்நாட்டு மேல அன்பு வந்துருச்சி. எங்கிருந்து செங்கோலை கண்டு பிடிச்சிட்டிங்க நீங்க?
வந்தே பாரத் ரயில் என்று சொல்கின்றீர்கள் நல்ல விஷயம். எத்தனை ரயில்தான் தொடங்கி வைப்பீங்க. ஸ்டேஷன் மாஸ்டரா நீங்க? ஒரு நாட்டோட பிரதமர். வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்திட்டீங்க. முடிக்கனும் இல்ல அதை. என்ன பிரச்சனை உங்களுக்கு? நீங்க இருக்கீங்கனு தெரியனுமா? நீங்க இருக்கீங்க என்பதை நான் உணரனும். தெரிய வேண்டாம். 24 மணி நேரம் வேலை பார்க்குறீங்க, என்னதான் வேலை பார்க்குறிங்க? காஸ்ட்யூம்ஸ்க்கு எவ்ளோ நேரம் ஆகுது? மேக்கப்புக்கு எவ்ளோ நேரம் ஆகுது? பயணத்திற்கு எவ்வளவு நேரம் ஆகுது. அந்தந்த ஊருக்கு போய்ட்டு எம்.எல்.ஏக்களை வாங்குறதுக்கு எவ்ளோ நேரம் ஆகுது? ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகுது? இதான் வேலை பார்க்குறதா? அது யார் காசு?
கேள்வி: திடீர் தமிழ் பாசத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: உங்கள் கட்சியின் சின்னம் பூவா இருக்கலாம். தமிழர் காதுல எல்லாம் பூ வைக்காதிங்க. செங்கோல் உங்களுக்கு திடீரென எங்கிருந்து வந்தது? புல்வாமாவில் இறந்த வீரர்களுக்கு விமானம் அனுப்ப முடியல ஆதினத்தை மட்டும் ஸ்பெஷல் பிளைட்ல கூட்டிகிட்டு போவீங்களா? யார்கிட்ட விளையாடுறீங்க? செங்கோல் என்றால் என்ன மன்னராட்சி தானே. மன்னர் ஆட்சியா இருக்கு இப்போ. நான் ரொம்ப பெரிய நடிகன். என் முன்னாடி நடிக்காதிங்க. என்னை அவமதிக்காதீங்க. செங்கோல் இல்லை அது. கோல் மால்.
கேள்வி: பிரதமர் தன்னை மன்னராக நினைக்க ஆரம்பிச்சிட்டாரா?
பதில்: அவரு ஆரம்பிச்சிட்டாரு. மாற வேண்டியது நாம தான். தமிழனோடு பிரச்சனை ஒரு இந்திக்காரனுக்கு எப்படி புரியும். வேட்டி கட்டினால் தமிழனாகி விட முடியுமா? இது ஒரு நாடகம்.
கேள்வி: கர்நாடக தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: மக்கள் காங்கிரஸை ஜெயிக்க வைக்கல. பாஜகவ இறக்கினாங்க. காங்கிரஸ் ஒழுங்க வேலை பார்த்தால் அவங்கள் இருப்பாங்க.
கேள்வி: 2024 நெருங்கி கொண்டு இருக்கிறது? ஜெயிக்க போவது திராவிட மாடலாக இருக்குமா? குஜராத் மாடலாக இருக்குமா?
பதில்: உணர வேண்டிய காலம் வந்தாச்சு