இரண்டு நாட்களில் 8 பேர்: ஜார்க்கண்டை அச்சுறுத்தும் காட்டு யானைத் தாக்குதல்
இறந்தவர்கள் சுக்பீர் கிரோ, ரந்தாவா தேவி, கோண்ட்வானா ஓரான் மற்றும் புனாய் ஓரான் என அடையாளம் காணப்பட்டனர்.
காட்டு யானை தாக்கியதால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் இரண்டு நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய் அன்று இட்கி மற்றும் போரேயா கிராமங்களில் நடந்த யானைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர், அதற்கு அடுத்து திங்களன்று மாநிலத்தின் லோஹர்டகா மாவட்டத்தில் யானைகள் தாக்கியதால் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதை அடுத்து லோஹர்டகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்கள் சுக்பீர் கிரோ, ரந்தாவா தேவி, கோண்ட்வானா ஓரான் மற்றும் புனாய் ஓரான் என அடையாளம் காணப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கிய வனத்துறை, மேலும் இதுதொடர்பான அரசு நடைமுறை முடிந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.3.25 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தனது கூட்டத்திலிருந்து வழிதவறிய காட்டு யானை கூட்டத்தைப் பிரிந்ததால் கோபமடைந்ததாகவும் அது கிராமத்தில் புகுந்து மக்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வனத்துறையினர் யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக யானைகள் ஒருபக்கம் தாக்குதல் நடத்த மற்றொரு பக்கம் ரோபாடிக் யானைகள் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றன,
கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள கோயிலுக்கு 11 அடி உயரம், 800 கிலோ எடையிலான பிரமாண்ட ரோபோட்டிக் யானை அர்பணிக்கப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் ரோபோட்டிக் யானையை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு ரோபோட்டிக் யானை:
கேரளாவில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமிகளுக்கான சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவும், விழாக்கால சேவைகளுக்காகவும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதற்கு மாற்றாக, இரிஞ்சலகுடா அருகே உள்ள கல்லேட்டம்குரா பகுதியில் உள்ள இரிஞ்சடபில்லி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில், ரோபோட்டிக் யானை ஒன்று கோயில் சேவைகளுக்காக அர்பணிக்கப்பட உள்ளது. ”இரிஞ்சடபில்லி ராமன்” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோட்டிக் யானை, வரும் 26ம் தேதியன்று கோயில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
ரோபோட்டிக் யானை வடிவமைப்பு:
அயர்ன் ஃப்ரேம் மற்றும் ரப்பர் கோட்டிங் கொண்டு 11 அடி உயரம் மற்றும் 800 கிலோ எடையிலான பிரமாண்ட ரோபோட்டிக் யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரிஞ்சடபில்லி குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு, பீட்டா அமைப்பின் சார்பில் இந்த ரோபோட்டிக் யானை தானமாக வழங்கப்படுகிறது. கோயில் நடவடிக்கைகளின்போது 4 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யானையை உருவாக்க 5 லட்ச ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோட்டிக் யானையிம் தலை, கண்கள், வாய் மற்றும் காது ஆகியவை மின்சாரம் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உறுப்புகள் எப்போதும் அசையும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யானையை, முழுமையாக தயாரிக்க 2 மாதங்கள் ஆகியுள்ளது. யானையின் தும்பிக்கையை தவிர மற்ற உறுப்புகள் அனைத்தும் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன. யானை மீது அமர்ந்துள்ள பாகன் சுவிட்ச் ஆன் செய்தால் மட்டும், தும்பிக்கையில் இருந்து தண்ணீர் தெளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் அநாவசிய குரல்களை எழுப்பாது எனவும், எதிர்பாராத விபத்துகள் எதுவும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது