மேலும் அறிய
Advertisement
ஆந்திராவில் சாலை விபத்து: தமிழர்கள் 8 பேர் உயிரிழப்பு..
ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 15 பேர் டெம்போ வேனில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நெல்லூர் அருகே தாமரமடுகு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 5 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion