5G Spectrum Auctions: 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடக்கம்! எதிர்பார்ப்புகள் என்ன?
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.
நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன தொலைத்தொடர்வு சேவைக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், அதானி, வோடோஃபோன் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 4.3 லட்சம் கோடி அளவுக்கு ஏலம் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைவரிசையின் தேவையின் அடிப்படையில், ஏலம் எவ்வளவு நாள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 ஜிகாஹெட்ஸ் அளவு கொண்ட அலைவரி ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிவேக இண்டெர்நெட் சேவை கிடைக்கும்.
Much-awaited auction for 5G spectrum commences
— ANI Digital (@ani_digital) July 26, 2022
Read @ANI Story | https://t.co/n6WItjAwZ9#5GAuction #5GSpectrum #India5G #Telecom pic.twitter.com/Ullh4iMQvj
5G spectrum auction begins online. Reliance Jio, Adani Group, Bharti Airtel, and Vodafone Idea are the four major participants in the auction.
— ANI (@ANI) July 26, 2022
இதற்கு ஏற்கனவே ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடி வைப்பு நிதியாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்ல போவது அம்பானியா?
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதானி குழுமத்திற்கு இடையே கடும் போட்டி இருக்கும். வைப்புத் தொகையான ப்ரீ ஆக்சன் டெபாசிட்டை மிக அதிகமான அளவில் செலுத்தியிருக்கிறது ஜியோ நிறுவனம். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக தொகையை கேட்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிலையன்ஸ் குழும் மட்டுமே இந்தப் போட்டியில் இருந்தநிலையில், அதிரடியாக அதானி குழுமமும் பங்கேற்பதை அறிவித்தது. 2030 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்கும் திட்டங்களை அதானி வெளியிட்டுள்ளார். அதனால் ஜியோவிற்கு அதானி குழுமம் சவால் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அதானி குழுமம் 1 டிரில்லியன் தொகையை வைப்புத் தொகையாக கொடுத்துள்ளது.
5ஜி இணைய சேவை செயல்பாட்டுக்கு வந்தால், 4.3. டிரில்லியன் டாலர் இந்திய பொருளாதாரத்தில் புழங்குமாம். 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இந்த ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் 20 ஆண்டுகளுக்கு அதன் உரிமையை வைத்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்