50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்... நகை, புத்தாடைகளை பரிசாகக் கொடுத்த விருந்தினர்!
விருந்தினர்கள் மணமக்களுக்கு புத்தாடைகள், நகைகளை பரிசாக வழங்கிய நிலையில், திருமணத்தை நடத்தி வைத்த சனஸ்தானம் தம்பதியினருக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பரிசாக வழங்கியது.
![50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்... நகை, புத்தாடைகளை பரிசாகக் கொடுத்த விருந்தினர்! 50 differently-abled couples get married in a mass marriage ceremony 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்... நகை, புத்தாடைகளை பரிசாகக் கொடுத்த விருந்தினர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/30/4bade393f4acbdb9a7844869c55fb8461661852035647224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகை, புத்தாடைகள் பரிசு
உதய்பூரில் உள்ள நாராயண் சேவா சனஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஒன்று இந்தத் திருமண விழாவை ஏற்பாடு செய்த நிலையில், இந்துமுறைப்படி வேத மந்திரங்கள் முழங்க இந்நிகழ்வு நடைபெற்றது.
50 physically-challenged couples tie knot in #Rajasthan
— IANS (@ians_india) August 29, 2022
Read: https://t.co/A7pTuGUPpj pic.twitter.com/WCL76otjHz
இந்நிகழ்வு குறித்து திருமணத்துக்கு முன்னதாக தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் கைலாஷ் அகர்வால் பேசுகையில், ”தங்கள் இயலாமையாலும் வறுமையாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை சகோதர சகோதரிகள் இன்று (ஆக.30) திருமணம் செய்துள்ளார்கள். இந்தத் திருமணங்கள் முழு பாரம்பரிய முறைகளுடனும் பிரமாண்டமாகவும் நடைபெறவுள்ளது” என்றார்.
முன்னதாக இத்திருமணத்தில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் மணமக்களுக்கு புத்தாடைகள், நகைகளை பரிசாக வழங்கிய நிலையில், திருமணத்தை நடத்தி வைத்த சனஸ்தானம் தம்பதியினருக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பரிசாக வழங்கியது.
மேலும் படிக்க: இலங்கை அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சலுகைகள் எதுவும் வழங்க முடியாது - முன்னாள் தலைமை நீதிபதி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தம்பதியினர் தங்கள் வீடுகளுக்கு வெளியேயும், குப்பைத்தொட்டிகளின் அருகேயும் செடிகள் நட ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாராயண சேவா சனஸ்தானத்தின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதே போல் முன்னதாக குஜராத் மாநிலம், வதோதராவில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது இணையத்தில் கவனமீர்த்தது.
மண்டபத்துக்கு சாரட் வண்டிகளில் மாற்றுத்திறனாளி ஜோடிகள் அழைத்துவரப்பட்டு அம்மாநில தொண்டு நிறுவனம் ஒன்றால் நடத்தி வைக்கப்பட்ட இந்தத் திருமணமும் வெகு விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
25 specially-abled couples tied the knot in a mass marriage ceremony in Gujarat's Vadodara yesterday pic.twitter.com/coydWk5YES
— ANI (@ANI) April 26, 2017
அதே போல் 2017ஆம் ஆண்டு குஜராத்தில் 25 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)