இலங்கை அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சலுகைகள் எதுவும் வழங்க முடியாது - முன்னாள் தலைமை நீதிபதி
முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளும் , கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்க முடியாது என அந்நாட்டு முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் .சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டப்படி முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளும் , முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்க முடியாது என அந்நாட்டு முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற அதிபர் அல்ல எனவும், அவர் பொறுப்பை விட்டு விலகிச் சென்ற அதிபர் என முன்னாள் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.ஆகையால் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் அதிபர் ஒருவருக்கு வழங்கும் சலுகைகளை வழங்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த சலுகைகளும் அவருக்கு வழங்க முடியாது என அந்நாட்டு முன்னாள் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனது பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் குறித்த ஐந்து ஆண்டு காலம் சேவையில் நீடிக்கவில்லை என்பதாலும் ,இடையில் விட்டு விட்டு சென்றதாலும் அவருக்கு முன்னாள் அதிபருக்குரிய சலுகைகள் வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் முன்னாள் அதிபர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்பு சலுகைகளும் கோத்தாபய ராஜபக்சவுக்கு தர முடியாதென முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா சுட்டிக்காட்டி உள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு முன்னாள் அதிபருக்குரிய சலுகைகள் இல்லை என அறிந்த படியால்தான் அவர் இலங்கைக்கு திரும்பும் விடயத்திலும் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த சிறப்பு சலுகைகள் இல்லை என்பது குறித்து கோத்தாபயவுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே இவ்வாறு பொறுப்பிலிருந்து இடையில் விலகிய அதிபர் ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது என முன்னாள் தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தால் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் அதிபருக்குரிய சிறப்பு சலுகைகள் இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி கோத்தபாய ராஜபக்சவுக்க வழங்கப்படும் என பொதுஜன பெரமுன கட்சியினர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தனர்.அதேபோல் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவே அங்கிருந்த ஊடக செய்திகள் வழியாக அறிய முடிந்தது. ஆகவே ஒரு அதிபருக்குரிய பதவி காலத்தை கோத்தபாய பூர்த்தி செய்ய வில்லை என்றபடியாலும், நாட்டை விட்டு வெளியேறிய படியாலும் முன்னாள் அதிபருக்குரிய சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது என இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகவே கோத்தபாய ராஜபக்ச ஒரு சாதாரண குடிமகனாக இலங்கைக்கு திரும்பினால் சிறப்பு சலுகைகள் எதுவும் இன்றி அவருடைய சொந்த வீட்டில் வாழ முடியும் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் இலங்கை அரசியலமைப்பு சட்டம் என்பது அதிகாரத்திற்கு வரும் தலைமை அரசியல்வாதிகளால் மாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது .ஆகவே இந்த விடயத்தில் எதுவும் நடக்கலாம் சிறிது காலம் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.