IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! கதிகலங்க வைக்கும் மாணவர்களின் மரணம் - என்ன தான் நடக்கிறது?
டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
மாணவர் தற்கொலை:
இந்த நிலையில், டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான மாணவர், டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் மாணவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று, சக மாணவர்கள் அறையின் கதவை நீண்ட நேரமாக திறக்க முயன்றார். கதவு திறக்க முடியாததால், விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கிய மாணவர்:
விடுதி காப்பாளர் கதவை உடைத்து அறையில் பார்த்தபோது, மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தது சஞ்சய் நெர்கர் (24) மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மாணவரின் பெற்றோர்கள் வியாழன்கிழமை இரவு அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவர் பதிலளிக்காததால், விடுதி காப்பாளரிடன் பெற்றோர் கூறியிருக்கின்றர். இதனை அடுத்து தான், மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க