Crime: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் மர்ம மரணம்! சடலமாக மீட்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்! என்னாச்சு?
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு:
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). இவரது மனைவி அலிஸ் பிரியங்கா (40). இந்ந தம்பதிக்கு நான்கு வயதில் இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நியூ செர்சியில் வசித்து வந்துள்ளனர். கடந்த வருடம் தான் சான் மேடியோ கவுண்டியில் இவர்கள் 2.1 பில்லியன் டாலர் மதிப்பில் வீட்டை வாங்கி குடிபெயர்ந்தனர்.
இவர்கள் இருவரும் மெட்டா மற்றும் கூகுளில் பணிபுரிந்துள்ளனர். மெட்டாவில் பணிபுரிந்து வந்த ஆனந்த், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணியில் இருந்து விலகி, ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிலையில், தான் ஆனந்த், அவரது மனைவி அலிஸ் பிரியங்கா, 2 குழந்தைகள் வீட்டில் உயிரிழந்த நிலையில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனந்த் மற்றும் அவரது மனைவி யாரும் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனை அடுத்து, வீட்டிற்குள் சென்ற ஒருவர் 4 பேர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தபோது, ஆனந்த மற்றும் அவரது மவி பிரியங்கா பாத்ரூமில் துப்பாக்கிச் சுடு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். இவர்களது இரண்டு குழந்தைகள் படுக்கை அறையில் இறந்துள்ளனர்.
கொலையா? தற்கொலையா?
இதனை அடுத்து, நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சான் மேடியோ காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்தும் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "வீட்டின் கதவுகள் பூட்டி இருந்தது. வீட்டில் அனைத்து பகுதியின் கதவுகளும் மூடியிருந்தது. ஜன்னல் வழியாக அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அப்போது 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் சடலமாக கிடந்தனர். குளியலறையில் துப்பாக்கிகளை கைப்பற்றினோம். குளியலறையில் ஆனந்த் மற்றும் அவரது மனைவி பிரியங்கா துப்பாக்கி சுடு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர்.
தற்கொலையா? கொலையா? என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்றார். நீதிமன்ற பதிவுகளின்படி, 2016ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்து கோரி ஆனந்த் மனு தாக்கல் செய்தார். ஆனால், விவாகரத்து எதுவும் நீதிமன்றம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு!