’எல்லாருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கொடுத்தாகணும்’ – ஒன்றிணைந்த 13 எதிர்க்கட்சிகள்..
எதிர்க்கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, தேவே கவுடா, ஷரத் பவார், மம்தா பனர்ஜி , உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், மு.க ஸ்டாலின், மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை.
அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி (Free Mass vaccination drive) செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என மத்தியில் 13 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, தேவே கவுடா, ஷரத் பவார், மம்தா பனர்ஜி , உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், மு.க ஸ்டாலின், மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொற்று பரவியிருக்கும் காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கும் கட்டுப்பாடற்ற ஆக்சிஜன் விநியோகம் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்துகிறோம். உடனடியாக நாடு முழுவதும் இலவச கூட்டு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தக் கோரி நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தடுப்பூசிக்கான ரூ.35000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டை இதற்காக உபயோகிக்க வலியுறுத்துகிறோம்’எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்தக் கொரோனா பாதிப்பு எந்த நேரமும் 20 மில்லியனை எட்டும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.