மேலும் அறிய
Advertisement
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
’’திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது’’
திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், குமரி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேலும் நெல் பயிர்கள் பாதிக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை பொதுப்பணித் துறை ஊழியர்களை கொண்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion