மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் நடைபெற்ற பருத்தி ஏலம் - அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 8,219 ரூபாய்க்கு ஏலம்
’’அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 8,219 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5,409 ரூபாய்க்கும், சராசரியாக 6,666 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது’’
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காதது மற்றும் பருவமழை பொய்த்து போனது உள்ளிட்ட காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் தற்பொழுது அதுவும் ஒரு போக சாகுபடியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடப்பாண்டில் மேட்டூர் அணையானது ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சைபயிறு, மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களை பயிரிட விவசாயிகள் மாறி வருகின்றனர். அதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்து பச்சை பயிறு, மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளிக்கிழங்கு, உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் இந்தப் பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், 18 ஆவது வாரமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 1,066 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 8,219 ரூபாயும், குறைந்தபட்சமாக 5,409 ரூபாயும், மற்றும் சராசரியாக 6,666 ரூபாய் விவசாயிகளுக்கு விலை கிடைத்ததாக சரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து பகுதிகளையும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக இந்த ஆண்டு முழுமையாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகபட்ச விலைக்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி கிராமங்களிலும் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்கு துணை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் திறக்கப்பட்டு உள்ளதாகவும் விற்பனைக் கூடத்தின் செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உடல்நலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion