மேலும் அறிய

’பருவ வயதை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் வாசித்த புத்தகம் ’- கோவை ஆட்சியர் சொன்ன குட்டி ஸ்டோரி..!

”புத்தகங்களை படிக்கப் படிக்கத் தான் ஆர்வம் அதிகரிக்கும். நல்லது, கெட்டது புரியும். பெற்றோர் தேவையில்லாமல் சிறுவர்களை அதைப்படி, இதைப்படி, அந்த மொழியைப் படி, இந்த மொழியைப் படி என வற்புறுத்தக் கூடாது.”

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். அப்போது ஆட்சியர் சமீரன் வாசகர்கள் முன்பு தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தேன். முதுகுளம் என்ற குக்கிராமம் தான் எங்கள் சொந்த ஊர். அந்த கிராமத்தில் ஒரு நூலகம் உண்டு. அதில், மாதவ பணிக்கர் என்ற நூலகர் பகுதி நேரமாக பணி செய்து வந்தார். அவரது முழு நேரத் தொழில் முடி திருத்துவது. நூலகத்தை ஓட்டியே அவரது முடி திருத்தும் கடை இருந்தது. காலையில் அவரின் வேலையை கவனிப்பார். இடையிடையே வாசகர்கள் யாரேனும் வந்தால், நூலகத்தைத் திறந்து விடுவார். பருவ வயதினர் படிக்கும் புத்தகங்கள் இருக்கும் பகுதிக்குள், அந்த காலத்தில் சிறுவர்களை விடமாட்டார்கள்.

“இங்க வராதீங்க. அந்த பகுதிக்கு போய் அமர்சித்ர கதா படிங்க. பொன்னியன் செல்வன் படிங்க” என்று கூறி சிறுவர்களை மாதவ பணிக்கர் விரட்டிக் கொண்டிருப்பார். பருவ வயது வந்ததும், அந்த பகுதிக்குள் என்ன புத்தகங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. அந்த நாளும் வந்தது. அன்று, நிறைய தாடியுடன் ஒருவர் முடி திருத்துவதற்கு மாதவ பணிக்கர் கடைக்கு வந்திருந்தார். அந்த பணியில் பணிக்கர் பிசியாக இருந்தார். அப்போது நூலத்திற்குள் நுழைந்தேன்.

பத்மநாபன் நாயர் என்ற பம்மன் என்ற எழுத்தாளரின் ‘தம்புராட்டி’ என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. கையில் கத்தியுடன் முடி திருத்திக் கொண்டிருக்கும் மாதவ பணிக்கர் வாசலில் இருப்பாரே என்ற பயம் வந்தது.

’தம்புராட்டி’ புத்தகத்தின் மேலட்டையை நீக்கி விட்டு, வேறொரு பிரிவில் ஜான் ரீட் எழுதிய ‘உலகை உலுக்கிய 10 நாட்கள்’ புத்தகத்தின் அட்டையை எடுத்து போட்டுவிட்டேன். அதற்குள் முடி திருத்தம் செய்து விட்டு, மாதவ பணிக்கர் நூலத்துக்குள் வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் அட்டை மாற்றப்பட்ட தம்புராட்டி புத்தகத்தை கொடுத்தேன். அவர், அதை வாங்கி நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. புத்தகத்துக்கு அட்டை மாற்றியதைக் கண்டுபிடித்து விடுவாரா என்ற பயம்.

நல்ல வேளை அவர் கண்டுபிடிக்கவில்லை. புத்தகத்துடன் உற்சாகமாக புறப்பட தயாரானேன். அப்போது பின்னணியில் பணிக்கர் கரகர குரலில், “தம்பி, புத்தகத்தை திரும்பக் கொண்டு வரும்போது ஒரிஜினல் அட்டை போட்டு கொண்டு வாங்க” என்றார். அவ்வளவு தான் ஓடுவதா, நடப்பதா என்று தெரியாமல், எப்படியோ வீட்டுக்கு வந்தேன். “நான் புத்தகத்துக்கு அட்டை மாற்றியதை அவர் அறிந்து கொண்டார்” என்பதை நினைத்து, ஒழுங்காக அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், புத்தகங்களை படிக்கப் படிக்கத் தான் ஆர்வம் அதிகரிக்கும். நல்லது, கெட்டது புரியும். பெற்றோர் தேவையில்லாமல் சிறுவர்களை அதைப்படி, இதைப்படி, அந்த மொழியைப் படி, இந்த மொழியைப் படி என்று வற்புறுத்தக் கூடாது. புத்தகங்கள் மட்டுமல்லாமல், ஒரு செய்தித்தாளில் வரும் சின்னச் சின்னச் கட்டுரைகளைக் கூட வாசிக்க வேண்டும். அது பிற்காலத்தில் எழுத்தாளராகக் கூட உதவும்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget