மேலும் அறிய

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - வானதி சீனிவாசன் கண்டனம்

”தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்”

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”காரைக்குடியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்தது. இதனை கேட்டதும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் பா.ஜ.க., தமிழகத்தில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாத சக்திகளின் வேலையாகக்கூட இது இருக்கலாம்.

கோவை மாநகரம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்ட பகுதி. 1998 பிப்ரவரி 14-ம் தேதி, பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொல்வதற்காக, கோவை மாநகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பையும், 1997 நவம்பர் 29-ம் தேதி, போக்குவரத்து காவலர் செல்வராஜ்  கொல்லப்பட்டதை தொடர்ந்து, கோவை மாநகரில் நடந்த கலவரத்தையும் யாராலும் மறக்க முடியாது. இவை தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள். இந்த இரு கொடூரங்களும் நடந்தபோது தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இந்தப் பின்னணியில் தான், பா.ஜ.க. அலுவலகத்தின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பார்க்க வேண்டும். 

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு https://t.co/3D2Xswsf4S pic.twitter.com/2dhefO0ASS

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 23, 2022

">

இதுகுறித்து தமிழக காவல் துறை முழுமையான, நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி, விசாரணையை முடுக்கி விட வேண்டும். நாடு முழுவதும் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொண்டு காவல் துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அமைதிக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குகிறது.

ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்களிடம் தான் அரசு கருணை காட்ட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை கொல்லத் துணியும், பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget