மேலும் அறிய

‘மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்திப் பார்ப்பது ஸ்டாலினா? பிரதமரா?’ - வானதி சீனிவாசன் கேள்வி

ஸ்டாலின் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளாரா? முதல்வராக வாழ்த்து தெரிவித்து உள்ளாரா? மோடி எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்கிறார். அவரை பற்றிப் பேச அருகதை உங்களுக்கு இல்லை.

கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலணி பகுதியில் இருக்கும் ஒக்கிலியர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையை வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திருமண விழாவில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் கொடுப்பது திராவிட மாடலா? இது அநாகரிகம். குடும்ப வாரிசு அரசியல் நடத்தும் தி.மு.க குறை கூற அருகதை இல்லை. முதல்வர் திருமண நிகழ்வில் வாழ்த்துக்களை மீறி கடுமையான அரசியல் விமர்சனத்தை வைத்து உள்ளார்.

பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை எனச் சொல்லுங்கள். வாரிசு என்ற காரணத்திற்காகப் பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். மகன் என்பதால் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பா.ஜ.க.வை குறை கூற முதல்வருக்கு அருகதை  இல்லை. சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் பாதிக்கப்படுவது பெண்கள். மதக் கலவரத்தை உருவாக்குவதாகக் கற்பனையான விஷயத்தை முதல்வர் சொல்கிறார்.

Also read : Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. முத்தாலக் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைக் கொடுத்தது. சுயநல அரசியலுக்காகப் பெண்கள் வாய்ப்பைப் பறிக்கக் கூடாது. கோயில் பிரச்சனையில் அரசாங்கத்தால் அணுக முடியவில்லை. பெரியார் மண் எனச் சொல்லும் இந்த மண்ணில் சாதியில் மக்கள் மனதில் ஏன் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை. உங்கள் அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாகப் பேசுகின்றனர். அயோத்தியில் ராமபிரானுக்குக் கோயில் அமைப்பது ஒன்று. ஜம்முவிற்கு 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது, இதனால் அம்மக்கள் ஜனநாயகத்திற்குத் திரும்பிக் கொண்டு உள்ளார்கள். பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பா.ஜ.க தெரிவித்து உள்ளது.

முதல்வர் தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளாரா? கட்சி தலைவராக வாழ்த்து தெரிவித்து உள்ளாரா? மோடி எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்கிறார். அவரை பற்றிப் பேச அருகதை உங்களுக்கு இல்லை. உதயநிதி படத்திலும் நடிக்கிறார் வெளியிலும் நடிக்கிறார். தி.மு.க.விற்கு வாக்களிப்பது குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பது, ஊழலுக்கு வாக்களிப்பது என நாங்களும் சொல்கிறோம். மதுபான அதிக விலை தொடர்பாக ஆதாரம் கேட்ட அமைச்சர் மருத்துவமனையில் உள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டு சிதம்பரம் கோயில் விவகாரத்தில் வேலை செய்கின்றனர். பிரச்சனையைக் கிளப்ப செயல்படுகின்றனர். இந்து மத விரோத எதிர்ப்பு நாடு அறிந்தது. சிதம்பரம் கோயில் பிரச்சனையில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget