மேலும் அறிய

'கோவை கார் வெடிப்பு ஒற்றை ஓநாய் தாக்குதலா?’ - காவல்துறை விசாரணை

கார் வெடிப்பு சம்பவம் ’ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை’யை ஒத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக தாக்குதல் நடத்தும் முறையாகும்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

கோவை கார் வெடிப்பு ஒற்றை ஓநாய் தாக்குதலா?’ - காவல்துறை விசாரணை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்... அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பெட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ ஜெலசின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமியம் பவுடர், சிலிண்டர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரின் 3 நாள் கஸ்டடி முடிந்த நிலையில், காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் 'ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை' (Lone wolf attack) முறையை ஒத்திருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக தாக்குதல் நடத்தும் முறையாகும்.

கோவை கார் வெடிப்பு ஒற்றை ஓநாய் தாக்குதலா?’ - காவல்துறை விசாரணை

ஜமீஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களாக அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் கோனியம்மன் கோவில் உட்பட பல கோவில்களை சமீபத்தில் நோட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக் கொண்டு ஜமீஷா முபீன் காரை கோவில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்ன்றனர். இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்..ஏ விசாரணையை துவங்கும் முன்பே கோவை மாநகர காவல் துறையினர் முக்கியத் தகவல்களை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
EPS Case Dismissed: இபிஎஸ்-க்கு தொடங்கிய தலைவலி; பொதுச்செயலாளர் வழக்கில் மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன.?
இபிஎஸ்-க்கு தொடங்கிய தலைவலி; பொதுச்செயலாளர் வழக்கில் மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS meets MK Stalin | OPS ஸ்டாலின் திடீர் சந்திப்பு!ரகசிய பேச்சுவார்த்தை?திமுக கூட்டணியில் OPS?
DMDK DMK Alliance | திமுக கூட்டணியில் தேமுதிக?முரண்டு பிடிக்கும் EPS !ரூட்டை மாற்றும் பிரேமலதா?
Thirumavalavan | ‘’புள்ள உசுரு போயிருச்சு! 1 கோடி கொடுத்தாலும் வேணாம்’’திருமாவிடம் கதறிய கவின் தந்தை
EPS meets Nagendra Sethupathy | ’’எப்போ கட்டுன வீடு?’’  ராஜா வீட்டில் EPS OPS-க்கு பக்கா ஸ்கெட்ச்
Accident CCTV | பைக் மீது மோதிய லாரி தலை நசுங்கி இறந்த ஆசிரியை பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
EPS Case Dismissed: இபிஎஸ்-க்கு தொடங்கிய தலைவலி; பொதுச்செயலாளர் வழக்கில் மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன.?
இபிஎஸ்-க்கு தொடங்கிய தலைவலி; பொதுச்செயலாளர் வழக்கில் மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன.?
Sun Ramanathan : ’துணை முதல்வரே என் கண்ட்ரோல்தான்’ தஞ்சை மேயரின் பேச்சால் கொதிக்கும் உ.பிக்கள்..!
’துணை முதல்வரே என் கண்ட்ரோல்தான்’ தஞ்சை மேயரின் பேச்சால் கொதிக்கும் உ.பிக்கள்..!
ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீது அதிரடி நடவடிக்கை! காரணம் என்ன?
ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீது அதிரடி நடவடிக்கை! காரணம் என்ன?
பள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதி பள்ளியில் மாணவர் மர்ம மரணம்- விரிவான சாரணை நடத்தக் கோரிக்கை!
பள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதி பள்ளியில் மாணவர் மர்ம மரணம்- விரிவான சாரணை நடத்தக் கோரிக்கை!
தமிழ்நாட்டில் ஓட்டுப்போட போகும் 6.5 லட்சம் பீகாரிகள்... பாஜக ஸ்கெட்ச் வேலை செய்யுதோ?
தமிழ்நாட்டில் ஓட்டுப்போட போகும் 6.5 லட்சம் பீகாரிகள்... பாஜக ஸ்கெட்ச் வேலை செய்யுதோ?
Embed widget