மேலும் அறிய

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி - கோவையில் அதிர்ச்சி

கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆகாஷ் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

கோவை அருகே நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்த மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மகன் ஸ்ரீ ஆகாஷ். கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதுவதற்காக கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆகாஷ் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ஆகாஷின் அலறல் சத்தம் கேட்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

உடலில் தீக்காயங்களுடன் ஆகாஷை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கோச்சிங் சென்டரில் நடத்தப்படும் பயிற்சி தேர்வில் மாணவன் ஆகாஷ் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பெற்றோரிடம் மதிப்பெண்களை மாற்றி தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக கூறியுள்ளார். இதனை அறிந்த ஆசிரியர்கள், பெற்றோர் கோச்சிங் சென்டருக்கு நேரில் வர வேண்டும் என ஆகாஷிடம் கூறியதால் அவர், பெற்றோருக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
Vanni Arasu criticized Annamalai : மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
Embed widget