Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
Honda Cars June 2026 Discounts: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுன் மாதத்தில் ஹுண்டாய் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2.15 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Honda Cars June 2026 Discounts: ஹைப்ரிட் தொடங்கி எஸ்யுவி வரை ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் ஜுன் மாத சலுகையை ஹோண்டா அறிவித்துள்ளது.
சலுகைகளை அறிவித்த ஹோண்டா
இந்திய சந்தையில் ஜுன் மாதத்தில் ஹோண்டா கார்களை வாங்க விரும்புவோருக்கு, ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார் மாடல்கள் மீதும் கணிசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்யுவி தொடங்கி ஹைப்ரிட் வரையிலான நிறுவனத்தின் மாடல்கள் மீது 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பை பெற முடியும். குறிப்பிட்ட டீலர்கள் கைவசம் உள்ள கடந்த ஆண்டு யூனிட்களை விற்பனை செய்வதற்காக கூடுதல் சலுகைகளையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
அதிக சலுகையை பெறும் கார் மாடல்?
ஜுன் மாதத்தில் அதிக தள்ளுபடி பலனை பெறும் ஹோண்டாவின் கார் மாடலாக எலிவேட் எஸ்யுவி உள்ளது. உற்பத்தி ஆண்டு மற்றும் மாடல் ஆகியவற்றைச் சார்ந்து அதிகபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரையில் சேமிப்பை பெற முடியும். உள்ளூர் சந்தையில் க்ரேட்ட, கியா செல்டோஸ், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரடர் போன்ற மிட்-சைஸ் எஸ்யுவிக்களுக்கு போட்டியளிக்கும் விதமாக, வலுவான திறன் சார்ந்த எஸ்யுவி ஆக எலிவேட் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை வரம்பானது ரூ.11.60 லட்சத்தில் தொடங்கி ரூ.16.67 லட்சம் வரை நீள்கிறது.
ஹோண்டா ஹைப்ரிட் காருக்கான பலன்கள்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மாடலாக ஹோண்டா சிட்டி திகழ்கிறது. மேம்படுத்தப்பட்ட எடிஷன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து விற்பனையாகாமல் கையிருப்பில் உள்ள யூனிட்களை காலியாக்கும் நோக்கில், டீலர்கள் தற்போது ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய யூனிட்கள் மீது கணிசமான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். வழக்கமான நாடு தழுவிய தள்ளுபடிகளை போலல்லாமல், இந்தச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடுகின்றன மற்றும் பெரும்பாலும் கையிருப்பு இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. இதன் விலை வரம்பானது ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.21 லட்சம் வரை நீள்கிறது. நிலையான சிட்டி பெட்ரோல் எடிஷன்களுக்கு ரூ. 1.56 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. அதிக எரிபொருள் சிக்கனத்தை விரும்புவோர் சிட்டி e:HEV எனப்படும் ஹைப்ரிட் மாடலைத் தேர்வு செய்யலாம், இதற்கு இந்த மாத இறுதி வரை ரூ. 1.97 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஹோண்டாவின் மற்ற கார்களுக்கான சலுகைகள்:
சமீபத்திய மூன்றாம் தலைமுறை அமேஸ் காரானது ஜுன் மாதத்தில் ரூ. 67,000 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் இரண்டாம் தலைமுறை அமேஸ் தொடர்ந்து ரூ. 58,000 வரையிலான தள்ளுபடிகளைப் பெறுகிறது.
| கார் மாடல்கள் | ஜுன் மாத சலுகைகள் |
|---|---|
| ஹோண்டா எலிவேட் | ரூ. 2.15 லட்சம் வரை |
| ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் | ரூ. 1.97 லட்சம் வரை |
| ஹோண்டா சிட்டி பெட்ரோல் | ரூ. 1.56 லட்சம் வரை |
| ஹோண்டா சிட்டி - ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய எடிஷன் | கையிருப்பு இருப்பதைப் பொறுத்து விற்பனையாளர் தரப்பிலிருந்து வழங்கப்படும் சலுகைகள் மாறுபடுகின்றன |
| ஹோண்டா அமேஸ் (3வது தலைமுறை) | ரூ. 67,000 வரை |
| ஹோண்டா அமேஸ் (2வது தலைமுறை) | ரூ. 58,000 வரை |
ட்ரெண்டிங் செய்திகள்























