மேலும் அறிய

DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியாமல் திமுக தவித்து வருவதாக மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். 

ராகுல் காந்தி மீது விமர்சனம்

தங்கள் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலில் வெற்றி பெற்று விட்டு காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு சென்றதை  திமுக சரமாரியாக சாடி வருகிறது. அந்த வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்றைய தினம் வெளியான கட்டுரையில் ராகுல்காந்தியை சரமாரியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. திமுக உடன் இருந்து குழிபறித்தார், இரட்டை வேடம் போடுகிறார், காங்கிரஸ் கட்சியை குழிதோண்டு புதைக்கிறார் என சகட்டுமேனிக்கு திமுக விமர்சித்திருந்தது. 

பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.,  மாணிக்கம் தாகூர், “முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது. 2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா? மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது. திமுக பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞர் இருந்தார்.

தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை.மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.

கமிஷன் மாடல் திமுக

தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். “திராவிட மாடல்” என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது. அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான அரசியல் தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர்.

இன்று தமிழக அரசியலில் மக்கள் கேட்கும் கேள்வி வேறு. மே 4 தேதி  மாலை பாஜகவை எதிர்ப்பதாக பேசிக்கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன? .. மக்கள் அளித்த தீர்ப்பை தடுக்கவும், அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன? இப்போது அன்பு தலைவர் ராகுல் காந்தி பற்றி பேசுகிறார்கள். தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல.  பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர் அவர்.

Also Read: Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!

அரசியல் ஒழுக்கமும் வேண்டும்

என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும். தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. 

மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும்.மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள். ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என கூறி திருட்டு மாடல் என்ற ஹேஸ்டேக்கோடு மாணிக்கம் தாகூர் பதிவை நிறைவு செய்திருக்கிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget