மேலும் அறிய

'மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

”மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் எனப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பிள்ளைகளுடைய தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுதான் பெற்றோர், ஆசிரியர்களின் கடமையாக பார்க்கிறேன்”

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”DMK என்ற மூன்று கண்டெடுத்த MKS. இந்த AMP-க்கு கொடுத்த பொறுப்பால்தான், இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பாரதியாரின் வாழ்க்கை பிஎஸ்ஜி குழுமம் உண்மையாக்கி கொண்டுள்ளதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிக் கட்சியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டு பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது. 1921-ஆம் ஆண்டு தீபாவளியன்று பீலமேட்டை சேர்ந்துள்ள இந்த பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த பள்ளி. இப்படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும். பீலமேடு பகுதியை ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டியது கல்வி நிலையங்கள்தான்.

அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல மனிதர்களை அளிப்பது எதுவென்று கூறினால், அது எங்கள் பள்ளிக்கல்வித்துறை தான். அகாடமிக் சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் மாணவர்களை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடிய பாடங்களையும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன். மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் எனப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பிள்ளைகளுடைய தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாக பார்க்கிறேன்” என்றார்

“மாணவர்கள் நீங்கள், உங்களுடைய பெற்றோர் ஆசிரியர் என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதனை மனதில் வைத்து கொண்டு இந்த வயது படிக்கின்ற வயது என்பதால் படிப்பில், கவனம் செலுத்துங்கள். நம்முடைய ஆசிரியர் பெற்றோர்க்கு பெருமையை தேடி தர வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget