மேலும் அறிய

Isha Mahashivratri 2023 : ஈஷாவில் மகா சிவராத்திரி: எங்கு காணலாம்? பங்கேற்பது எப்படி? முழு விவரம்!

Isha Mahashivratri 2023 Tickets Online Booking: ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்க டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.

இந்தியா என்பது பன்முக தன்மை கொண்டது.  பலவிதமான கலாச்சாரங்கள் போன்றவற்றின் கலவையாகும். இதன் காரணமாக, நாடு முழுவதும் ஆண்டுதோறும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா, விசேஷம் என்று எடுத்துகொண்டால் பெரும் பட்டியல் நீளும். 

அப்படியான கொண்டாட்டமான ஒன்றுதான் மகா சிவராத்திரி. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

கோவையில் உள்ள ஈஷா மகா சிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு மகா சிவராத்திரி ஏராளமான பக்தர்களுடன் யோகா உடன் கூடிய வழிபாட்டுடன் கொண்டாடப்படும். இது  சமீப ஆண்டுகளாக மிகவும் பிரசித்திப்பெற்றது.

கோவை ஈசா மையத்தில் சிவராத்திரி

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வரும் 18 ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

சிவராத்திரியன்று அனைவரும் கலந்து கொண்டு தியானம் நடக்கும். பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கும். லிங்க பைரவி தேவி மகா யாத்திரை, தியானம், சத்குருவின் சத்சங்கம் அதோடு மக்கள் பக்தியுணர்வுடன் எதிர்பார்க்கும் ஆதியோகியின் தரிசனம் ஆகியவைகள் நடைபெற உள்ளது. இதோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து யோக அறிவியலை நாம் உணரும் வகையில் இந்நிகழ்வு இருக்கும். இதில் பக்தியுடன் நேரில் பங்கேற்று ஆதியோகி சிவனின் அருளை பெறலாம். இந்நிகழ்வை பொதுமக்கள் வீட்டிலிருந்தும் காணலாம். நேரலையிலும் ஒளிப்பரப்படும்.  ஈஷா நிறுவனத்தின் இணையதளத்திலும் நிகழ்ச்சியின் நேரலைக்கான லிங்க் வழங்கப்பட்டிருக்கும். 

ஆதியோகியின் அருள் பெறும் வகையில், சக்தியான ருத்ராட்சங்கள் வழங்கப்படும். பொதுமக்களுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ருத்ராட்ச பிரசாதங்களை பெறுவதற்கு 83000 83000 என்ற தொடர்பு எண்ணை அழைக்கலாம். இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும். ஆதியோகியின் அருளுடன் ருத்ராட்சம், விபூதி பிரசாதம், ஆதியோகி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சத்குரு அவர்களால் மகாசிவராத்திரி தினத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் ருத்ராட்சம், இலவசமாக வழங்கப்படுகிறது. சிவனின் அருளை இல்லத்திற்கு வரவழைக்க, பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை வீட்டிலிருந்தபடியே இலவசமாக பெற.. https://mahashivarathri.org/en/rudraksha-diksha?utm_campaign=rd&utm_medium=website&utm_source=msr_home_banner - என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். 

ஈசா மையத்தில் மகா சிவராத்திரி இசை நிகழ்ச்சிகள் விவரம்

சிவராத்திரி கொண்டாத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இடை மற்றும் நடன நிகிழ்ச்சிகள் நடைபெறுகிறது. இம்மாதம் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவற்றையும் ஆன்லைனில் நேரலையாக காணலாம்.

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பதிவு செய்வது எப்படி ?

ஆதியோகியின் அருளுடன் சிவராத்தியை கொண்டாட, சிவனை வழிபட ஈசா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கெற்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம். இதில் உங்களுடைய பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தி, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் புக் செய்யலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரம்: 

பிப்ரவரி 18, மாலை 6 மணி முதல் பிப்ரவரி 19 காலை 6 மணி வரை - (இந்திய நேரப்படி, சத்குருவுடன் மகா சிவராத்திரி )

டிக்கெட்களைப் பெற.. https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/

தொலைக்காட்சியில் காண - https://isha.sadhguru.org/mahashivratri/ta/participate/tv-channels/

ஈஷா சார்பில் இலவசன் நேரலை காண - https://isha.sadhguru.org/mahashivratri/ta/live-webstream/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget