குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல் சந்தேக மரணமாக உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் நள்ளிரவு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளியின் தாளாளர் எமில்டா. முதல்வர் டோம்னிக் மேரி. வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பள்ளியின் தாளாளர் எமில்டா. பள்ளியின் முதல்வர் டோமினிக் மேரி ஆகிய இருவருக்கும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் மட்டும் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உடலை பெற்ற பெற்றோர் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைத்துள்ளனர். உடலை பார்த்து உறவினர்கள் பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தையின் உடலில் கழிவுநீர் தொட்டியின் நீரில் மூழ்கி குடித்துள்ளது நுரையீரலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் அறிவித்த ரூ.3 லட்சம் வழங்கினார். சிறப்பு கவனம் மாவட்ட ஆட்சியர் செலுத்தி வருகிறார். நிச்சயமாக தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.