’’புடவை என்னமா விலை?’’ ரஷ்ய பெண்ணுடன் SELFIE பாஜக மகளிரணி ATROCITY
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு மதுரையில் பாஜக மகளிர் பேரணி நடைபெற்ற நிலையில், அங்கு வந்திருந்த வெளிநாட்டு பெண்ணிடம் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் புடவை என்ன விலை? என கேட்பதும், போராட்டத்திற்கு கண்ணகி வேடமணிந்து வந்த பெண் சிரித்துக்கொண்டே கோஷமிடுவதும், பெண்கள் கும்பலாக செல்பி எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டுபாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை பேரணி நடைபெறுகிறது.மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவிலில் உள்ள கண்ணகி சிலையில் இருந்து துவங்குகிறது. இந்த நீதி கேட்பு பேரணியை குஷ்பு துவக்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று மதுரை கண்ணகி கோவில் அருகே பாஜகவை சேர்ந்த மகளிர் திரண்டனர். அப்போது அந்த கோவிலை சுற்றிப்பார்க்க ரஷ்ய நாட்டைச்செர்ந்த பெண் ஒருவர் மஞ்சள் சிவப்பு நிறத்திலான அம்மன் புடவை அணிந்து வந்திருந்தார். அப்பெண்ணிடம் பாஜக நிர்வாகி ஒருவர் புடவை நல்லா இருக்கு..எங்க வாங்குனீங்க…என்ன விலை என பேசிக்கொண்டிருந்தார்..போராட்டத்திற்கு வந்த இடத்தில் பாஜக பெண் நிர்வாகி புடவை விலை கேட்ட சம்பவம் தற்போது விமர்சன வலையில் சிக்கியுள்ளது.
மேலும் கருப்பு சேலை, கையில் சிலம்பு, தலைவிரிக்கோலம் என கண்ணகி வேடமணிந்த பெண் ஒருவர் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் சிரித்துக்கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் சிரித்த முகத்துடன் கோஷமிடுவதை கண்டு அங்கிருந்தவர்கள் முகம் சுழித்தனர்.
மேலும் பெண்கள் அனைவரும் கும்பலாக செல்ஃபி எடுத்துக்கொண்டு அலப்பறை செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது போராட்டமா என சந்தேகிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளதாக நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.