Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி கதறும் தாய்
கழிவு நீர் தொட்டியில் உயிரிழந்த எல் கே ஜி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார் இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல் சந்தேகமரனமாக உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் நள்ளிரவு கைது செய்தனர்.
இந்நிலையில் குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடலை பெற்ற பெற்றோர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வீட்டில் வைத்துள்ளனர். வீட்டில் வைத்த உடலை பார்த்து உறவினர்கள் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்ததில் அதில் உள்ள கழிவுநீரை அதிகம் குடித்ததால் நுரையீரல் பாதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். நீதிபதி உத்தரவை தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.






















