மேலும் அறிய

திமுகவில் 4 முதல்வர்கள் இருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி பேச்சு..

"திமுகவில் 4 முதல்வர்கள் இருக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்.. இப்படி 4 அதிகார மையங்கள் திமுகவில் உள்ளன"

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிமுக இரண்டு, மூன்றாக போய்விட்டது என ஸ்டாலின் சொல்கிறார். இங்கு பொள்ளாச்சியில் வந்து பாருங்கள், ஒன்றாக உள்ளது. ஸ்டாலின் அதிமுகவை உடைக்க எவ்வளவோ அவதாரம் எடுத்து பார்த்தார். அது எல்லாம் தொண்டர்களால் தவிடு பொடி ஆக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெ இருவரும் இறைவன் கொடுத்த கொடை. 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. பாஜகவில் ஒரு தலைவர் வந்துள்ளார். பேட்டி கொடுப்பதே அவர் வேலை. விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார். அது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. ஏன் நாங்கள் நினைத்தால் பேட்டி கொடுக்க முடியாதா? தினமும் கொடுக்க முடியும். அதில் மக்களுக்கு என்ன பயன்? மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் நம் தலைவர்கள். எம்.ஜி.ஆர், ஜெ மக்கள் உள்ளதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இனி எத்தனை புதிய தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு அதிமுகவில் அனைவரும் சமம்.

ஆனைமலை நல்லாறு திட்டம்

மக்களின் குழப்பத்தில் சிலர் ஆதாயம் தேட முயல்கிறார்கள். அது எடுபடாது. ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என பாஜக தலைவர் ஒருவர் சொல்கிறார். அது கேரளா, தமிழ்நாடு மாநில அரசுகள் கலந்துபேசி முடிக்கும் திட்டம். அதிமுக ஆட்சியின்போது உயர் அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதான் பின் கொரோனா வந்தது. பின்னர் ஆட்சி மாறியது. இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி தான். அப்படி இருக்கையில் பாஜக ஆட்சி அமைந்தால் எப்படி அவர்கள் அத்திட்டத்தை முடித்து கொடுப்பார்கள்? எனவே மத்திய அரசால் ஆணைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியாது. அது மாநில அரசுகள் எடுக்கும் முடிவு.

மேகதாது விவகாரதில் ஏன் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவில்லை? அணை கட்டியே தீருவேன் என்கிறார் கர்நாடக அமைச்சர் சிவக்குமார். இதற்கு மத்திய அரசு தலையிட்டு கட்ட முடியாது என கூறவில்லையே? அப்படி இருக்கையில் ஆணைமலை நல்லறு திட்டத்தை எப்படி நிறைவேற்றுவார்கள்? ஆட்சியில் என்னென்ன திட்டம் கொண்டு வந்தோம் என ஸ்டாலினால் பேச முடியுமா? ஆனால் என்னைப் பற்றி இழிவாக பேசுவதை மட்டுமே பிரசாரதில் கொண்டு உள்ளார். என்னை திட்டுவார், அவதூறு பேசுவார், கிளம்பி போயிருவார். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு பேசுங்கள். இல்லை எனில் எங்கள் தொண்டர்கள் பேசுவார்கள், அவர்கள் பேசினால் தாங்க மாட்டீர்கள்.

திமுகவில் 4 முதல்வர்கள்

வரியை உயர்த்தி மக்கள் மேல் சுமையை திமுக அரசு போடுகிறது. திமுக என்றாலே கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதியை உள்ளே கொண்டு வர பார்க்கிறார்கள். செல்ப் எடுக்கவில்லை. போகும் இடத்தில் எல்லாம் ஒற்றை செங்கலை எடுத்து கொள்கிறார். ஒற்றை செங்கலை இங்கு தூக்கி காட்டி பயன் இல்லை. 38 எம்.பி.க்கள் வென்றார்கள், அவர்கள் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு அழுத்தம் தந்து இருக்க வேண்டும். அதை விட்டு ஒற்றை செங்கலை ஊர் ஊராக கொண்டு செல்வது,  உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் காட்டில் சென்று சிங்கம் மேய்ப்பானாம். அப்படி தான் இருக்கிறது. மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்து விட்டார்.

2ஜியில் இமாலய ஊழல் செய்த கட்சி திமுக. ஒரு வருடத்திற்கு 3000 கோடி கொள்ளை அடிக்கும் திட்டத்தில் இருந்தவர், தற்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். கள்ள மது விற்பனை மூலமும் பல ஆயிரம் கோடி வருமானம் பார்த்தார். அவற்றை சரியான நேரத்தில் திமுக தலைமைக்கு கப்பம் கட்டினார். திமுகவில் 4 முதல்வர்கள் இருக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்.. இப்படி 4 அதிகார மையங்கள் திமுகவில் உள்ளன. அதிமுக வெளிச்சத்தை கொடுத்த ஆட்சி. தமிழ்நாடு போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget