மேலும் அறிய

“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். இதற்கு முன்னதாக தனபால் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன். கோடநாடு வழக்கு தொடர்பாக சுதாகர் தலைமையில் ஏற்கனவே விசாரணை நடந்தது. தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.

எனது தம்பி ஏற்கனவே என்னிடம் எல்லாம் சொல்லியுள்ளார். கோடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது?, என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன். கோடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். மாற்றுக்கட்சியினர் இல்லை. ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர்.

கோடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியபடி பணம் தரவில்லை. எனது தம்பியை தாக்கியுள்ளனர்‌ எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்த்து தாக்கியுள்ளார். 2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து எனது தம்பி துப்பினார். பின்னர் மீண்டும் அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்து, அயோத்தி பட்டிணம் என்ற இடத்தில் உள்ள தென்னத்தோப்பில் மது அருந்தி உள்ளனர். அதிமுக முக்கிய நபர்கள் அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசி சென்றுள்ளனர்.

“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சிபிசிஐடி மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. 5 பேக்குகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷிடமும், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைத்துள்ளார். இன்று மாலை விசாரணைக்கு பின்னர் என்ன நடந்தது என விளக்கமாக கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள்.

எனக்கு மனநிலை பாதிப்பு இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இளங்கோவன், சவுக்கு சங்கர் போன்றோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். ஏற்கனவே சம்பவம் நடந்த போது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் சுதாகர் தலைமையில் விசாரணை நடந்தது. ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னை கடுமையான முறையில் தாக்கினர்.  அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. ஜஜி சுதாகரை விசாரிக்க வேண்டும். சேலம் எஸ்பி, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்பிசிஐடி முத்துமாணிக்கம் ஆகியோரை விசாரித்தால் எல்லாம் வெளியே வரும்.

2017 க்கு பிறகு கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் சொத்து மதிப்பு உயர்வு குறித்து இலஞ்ச ஒழிப்பு துறை கவனிக்க வேண்டும். இவ்வழக்கில் தடயங்கள் அழித்ததாக ஐஜி சுதாகர் என் மீது வழக்கு பதிவு செய்தார். நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை. எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சோதனை செய்த போது போனை வாங்கி கொண்டனர். ஐஜி சுதாகரின் பலவீனத்தை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சேர்த்து என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர். சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன். விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார். தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள். உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். எதற்கும் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget