Coimabtore Power Shutdown: கோவை மக்களே நாளை (09.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore Power Shutdown January 09 : கோயம்பத்தூரில் மின் பராமரிப்பு காரணமாக, பல்வேறு இடங்களில் நாளை மின் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பத்தூரில், நாளை ஜனவரி 09 ஆம் தேதி எந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
கோவயில் நாளை மின்தடை:
இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
பீளமேடு துணை மின் நிலையம்: ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர்.
ஆகையால், மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக, நாளை மின்சாரம் மூலம் செய்யக்கூடிய முக்கிய வேலைகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்துக் கொள்ளுங்கள்.
Also Read: Beer Sales Stopped: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எதனால்?