மேலும் அறிய

கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான கார் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஓட்டுநருக்கு அடி உதை

உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய திமுக கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேர ஆனந்த் என்பவரை அடித்து உதைத்தனர்.

கோவை சிவானந்தா காலனி அருகேயுள்ள கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். 66 வயதான இவர், மாற்றுத்திறனாளி. நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்றபடி, சிறுசிறு கூலி வேலைகளை செய்து வந்தார். இன்று 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள இரயில்வே பாலத்தின் கீழ் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது நடராஜன் வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய திமுக கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேர ஆனந்த் என்பவரை அடித்து உதைத்தனர். 


கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான கார் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஓட்டுநருக்கு அடி உதை

பின்னர் ஓட்டுனர் குபேர ஆனந்தை அவர்கள் காவல் துறையினருடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ஆர்.எஸ்.புரம் பகுதி திமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுனர் காரை எடுத்து சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இதனிடையே இது குறித்த தகவலறிந்து அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக பிரமுகரின் கார் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி கதீட்ரல் என்ற தேவலாயம் மீது கடந்த ஜனவரி 23 ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தேவலாயத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த செபஸ்தியார் சிலையை கட்டையால் சேதப்படுத்தினர். இதையடுத்து பாஸ்டின் ஜோசப் என்ற உதவி மத போதகர், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

இதன் அடிப்படையில் காவல் துறையினர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் மற்றும் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன் குமார், தீபக், மருதாசல மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிலையை உடைத்தது தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன் குமார், தீபக், மருதாசல மூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 3 பேரிடமும் கோவை மாநகர காவல் துறையினர் வழங்கினர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget