மேலும் அறிய

யோகாவில் மிரட்டிய சிறுவர்–சிறுமிகள்!! கோவையில் நடந்த உலக சாதனை முயற்சி...

கோவையில் நடைபெற்ற உலக சாதனை யோகா முயற்சியில் சிறுவர்–சிறுமிகள் கடினமான ஆசனங்களை செய்து அசத்தினர்.

கோவையில் சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற யோகா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சரவணம்பட்டியில் உள்ள விருக்ஷம் யோகாலயா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த உலக சாதனை முயற்சியில் ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையிலான 14 சிறுவர், சிறுமிகள் இரண்டு குழுக்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் அரிய மற்றும் சிரமமான யோகாசனங்களை துல்லியமாக செய்து அசத்தியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

முதல் குழுவில் இடம்பெற்ற மூன்று மாணவர்கள் கர்பாசனம், புஜங்காசனம் மற்றும் மச்சாசனம் ஆகிய ஆசனங்களை தொடர்ந்து அரை மணி நேரம் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஒரே ஆசனத்தில் கவனத்துடனும், உடல் கட்டுப்பாட்டுடனும் இருந்த அவர்கள் பார்வையாளர்களை கவர்ந்தனர். இதேபோல், மற்றொரு குழுவில் இடம்பெற்ற 11 மாணவர்கள் மரூதாசனம், திம்பாசனம், சக்ராசனம் ட்விஸ்ட், சிவலிங்காசனம், ஏகபாத சிரசாசனம், பூர்ண சலபாசனம் மற்றும் பூர்ண புஜங்காசனம் உள்ளிட்ட கடினமான யோகாசனங்களை ஒரு நிமிடத்தில் பலமுறை வேகமாக செய்து திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த உலக சாதனை முயற்சி குறித்து பேசிய விருக்ஷம் யோகாலயா நிறுவனர்களும், யோகா சாதனையாளர்களுமான ரூபிகா மற்றும் பவ்யஸ்ரீ, “யோகா மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இளம் தலைமுறையினரிடம் ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பெற்றோர்கள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனையை கைத்தட்டலுடன் பாராட்டினர். உலக சாதனை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget