மேலும் அறிய

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

கோவை மலமிச்சம்பட்டி அருகே பழிக்குப்பழியாக கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மலமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 கல்லூரி மாணவர்களைப் பிடித்து செட்டிபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர் இளவரசன் (18) என்பவரையும் அவரது நண்பர்களையும் தாக்கி, செல்போனைப் பறித்துச் சென்றது. இது குறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்தச் சம்பவத்தில் அமுதன் (19) என்ற மாணவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதிகாலையில் நடைபெற்ற முந்தைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.. 

இதனிடையே, காலை 8.30 மணியளவில் அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகிய இருவரையும் மலுமிச்சம்பட்டி அருகே ஒரு கும்பல் வழிமறித்தது. அதிகாலை சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், இருவரையும் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அமுதன் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய 5 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய பிற நபர்களையும் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட அமுதன், கடந்த மாதம் கல்லூரி விடுதி சமையல்காரரைத் தாக்கிய வழக்கில் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் அமுதன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல், அன்று அதிகாலை பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவும், அச்சம்பவத்தில் அமுதனுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பின் காரணமாகவும் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget