மேலும் அறிய

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய விவகாரம்; பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது வழக்குப்பதிவு

வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், ஒரு காவலர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் உடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய விவகாரம்; பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது வழக்குப்பதிவு

அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக் குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார். மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஏ.பி. முருகானந்தம் மிரட்டினார். அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.

முருகானந்தம் மீது வழக்குப்பதிவு

We have taken cognisance of the issue and a complaint is being given by the SST at Kunnathur Police Station, Tiruppur district. https://t.co/eAoFTtIqOL

— District Collector, Erode (@CollectorErode) April 5, 2024

">

அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கண்காணிப்பு நிலைக் குழுவினர் கூறியதால், ஆத்திரமடைந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகீங்கிரமாக மிரட்டினார். அப்போது காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறிய போது, தொடர்ந்து காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர் எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு, மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா? என்று தொடர்ந்து மிரட்டினார். பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியில் ஈடுபட்டு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget