மேலும் அறிய

ஒரே தள்ளலில் சாய்ந்த மரம்... மேட்டுப்பாளையத்தை பதறவைத்த ‘பாகுபலி’ யானையின் ஆக்ரோஷம்...

மேட்டுப்பாளையம் அருகே ஆக்ரோஷமான ‘பாகுபலி’ யானை மரத்தை வேரோடு தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது; வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் சுற்றித்திரியும் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி மரத்தை வேரோடு தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை மற்றும் நெல்லிமலை வனப்பகுதிகளில் ‘பாகுபலி’ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை அடிக்கடி சுற்றித்திரிந்து வருகிறது. வழக்கமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குச் செல்லும் இந்த யானை, மேட்டுப்பாளையம் – உதகை சாலையை அமைதியாகக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு ஓடந்துறை – உதகை சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடை அருகே வந்த பாகுபலி யானை திடீரென ஆக்ரோஷமாக நடந்துகொண்டது. சாலையோரத்தில் இருந்த பெரிய மரத்தை வேரோடு தள்ளியதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. யானையின் நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, பாகுபலி யானை உதகை சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுவாக அமைதியாகக் காணப்படும் பாகுபலி யானை திடீரென ஆக்ரோஷமாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget