மேலும் அறிய

கோவையில் கொட்டிய கோடை மழை ; மின்னல் தாக்கியதில் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்

டேனியல் என்ற ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு சொந்தமான காலியான இடத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் இறங்கியது. இதனால் மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. உக்கடம், கரும்புகடை, செல்வபுரம், சிங்காநல்லூர், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. உக்கடம் பகுதியில் சாலையே தெரியாத அளவிற்கு மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர். அதே வேளையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மழை நீர் நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது. 


கோவையில் கொட்டிய கோடை மழை ; மின்னல் தாக்கியதில் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்

இதேபோல செல்வபுரம் பகுதியில் மழை காரணமாக சாலையில் நீர் தேங்கியது. இதன் காரணமாக சாலையில் வாகனங்களில்  பயணித்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சலீவன் வீதியில் மழை நீர் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள லங்கா கார்னர் பகுதியில் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் அடியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றினர். 

இந்நிலையில் ரத்தினபுரி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது ஐசக் வீதியில் டேனியல் என்ற ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு சொந்தமான காலியான இடத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் இறங்கியது. இதனால் மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்ட பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர்  தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நெருக்கமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் மின்னல் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே பலத்த சத்தம் மற்றும் தீப்பொறியுடன் மின்னல் விழுந்ததையும், அதனால் தென்னை மரம் தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
coimbatore power cut: கோவையில் நாளை (26-11-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (26-11-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-11-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
கோவை குடிநீர் பிரச்னைக்கு ரூ.18 கோடியில் தீர்வு.. சிறுவாணியில் இனி தண்ணீர் வீணாகாது - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
TN Govt: தொழில்துறையில் பின் தங்கிய 8 மாவட்டங்களுக்கு விடிவுகலாம்..! 18 புதிய ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள்
தொழில்துறையில் பின் தங்கிய 8 மாவட்டங்களுக்கு விடிவுகலாம்..! 18 புதிய ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
Embed widget