மேலும் அறிய

Coimbatore Accident : கோவை அருகே விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்

திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதில் பலத்த காற்று காரணமாக விளம்பர பலகை பொருத்த அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் போது, பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் இத்தாலியன் ஃபர்னிச்சர் என்ற நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணிகள் இன்று மாலை நடைபெற்றது. இந்த பணிகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. விளம்பர பலகைகள் பொருத்தும் பணிகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 


Coimbatore Accident : கோவை அருகே விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்

அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதில் பலத்த காற்று காரணமாக விளம்பர பலகை பொருத்த அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அருண்குமார், சண்முகசுந்தரம் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காண்ட்ராக்டர் பழனிசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதாகவும், இதனால் பலத்த காற்று வீசிய போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். விளம்பர பலகை பொருத்தும் பணிகளில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் சாரம் சரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! புதிய ரயில் கிராசிங் நிலையம் – தெற்கு ரயில்வே அதிரடி திட்டம்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! புதிய ரயில் கிராசிங் நிலையம் – தெற்கு ரயில்வே அதிரடி திட்டம்!
coimbatore power cut: கோவையில் நாளை (27-10-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (27-10-2026) எங்கெல்லாம் பவர் கட் இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
Embed widget