CM Stalin: காஞ்சிபுரம்: நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முழு விவரம் இதோ!
காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். பாஸ்கர் விவசாயம் செய்து வருகின்றார். இவரின் மூத்த மகள் சரளா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகன் விஜய் மூன்றாம் வகுப்பும், மகள் பூமிகா இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று மாலை பள்ளி வகுப்பு முடிந்து வீடு திரும்பினர். பெற்றோர்கள் வயல் வேலைக்காக சென்றிருந்த நிலையில், விஜய் மற்றும் பூமிகா ஆகியோர் வீட்டின் அருகே உள்ள ஏரி பகுதிக்கு சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த பெற்றோர்,ஏரி பகுதிக்கு சென்று குழந்தைகளை தேடிப் பார்த்தனர்.
அங்கு அவர்கள் இல்லாததால், சந்தேகமடைந்த பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அபோது இரு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் விஜய் மற்றும் பூமிகா நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்,தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்மையில் துபாய் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இமாம் காசிம், முகமது ரபீக் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
மேலும் படிக்க
மேலும் படிக்க