மேலும் அறிய
Chennai Building Collapse : சென்னையில் பரபரப்பு... பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து... மீட்புப்பணிகள் தீவிரம்...!
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் (Armenian street) நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் (Armenian street) நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாரிமுனை, உயர்நீதிமன்றம், கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர். பழைய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில யாரும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
பழைய கட்டடம் என்பதால் அதனை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion