மேலும் அறிய

தவெக - நாதக கூட்டணியா? விஜய் தான் முடிவு எடுக்கவேண்டும் - சீமான் பேட்டி

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவர் குடும்பத்தை பற்றி இழிவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கும் ,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - சீமான் பேட்டி

சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி தென் சென்னை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது..

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவதும், வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது. அதற்கான களப்பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

உங்களுடைய தூண்டல் பெயரில் தான் கட்சி நிர்வாகிகள் அவதூறாக சமூக வளைதலங்களில் எழுதுகின்றனர் என்ற திருச்சி எஸ்.பி புகார் குறித்த கேள்விக்கு..

என்னை பற்றி எவ்வளவு அவதூறு எழுதுகின்றனர், அதெல்லாம் இவர் சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்லவா.. அல்லது இவர் நேசிக்கும் தலைமை சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்லலாமா..  

என் குடும்பத்தை பற்றி என் தாயை பற்றி எவ்வளவு இழிவாக பேசுகின்றனர்.  அதற்கு நான் ஏதாவது பதில் பேசுகின்றேனா இல்லை.  நான் அனைத்தையும் கடந்து போகிறேன். 

திடீரென வந்து நான் சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்வது எப்படி என்னால் ஏற்றுகொள்ள முடியும்.  எனக்கு இதுவா வேலை? நான் கொள்கைக்காக போரடிக்கொண்டிருக்கிறேன். 


தவெக - நாதக கூட்டணியா? விஜய் தான் முடிவு எடுக்கவேண்டும் - சீமான் பேட்டி

நான் எந்த பின்புலத்தில் இருந்து எவ்வளவு பெரிய கனவை கொண்டு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  இந்த மண்ணில் நடந்த எந்த போராட்டதில் நான் நிற்கவில்லை என்று நினைக்கிறீர்கள்

ஆகையால் இதெல்லாம் சும்மா… நீங்களே fake id ஐ உருவாக்கி நீங்கலே திட்டிக்கிட்டு அதற்கு பதில் போட்டுவிட்டு, நாம் தமிழ் கட்சி தான் என்று சொன்னால் யார் கண்டுபிடிக்க முடியும்?

எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அது வேலை இல்லை அதெல்லாம் செய்யமாட்டார்கள். அப்படி செய்பவர்களை உடனே கட்சியை விட்டு நீக்கியிருக்கிறேன். கடந்த காலத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

இப்படியெல்லாம் எழுத நான் கட்சி நடத்தவில்லை... ஆனாலும் இத்தகைய பதிவை நாங்கள் கண்டிக்கிறோம் கட்சியை விட்டு நீக்குகிறோம். எத்தனையோ வழக்கை பார்த்தாச்சு,  அதில் இந்த வழக்கும் இன்று அவ்வளவுதான். 

2026 சட்டமன்ற தேர்தலில் தவேக - நாதக கூட்டணியா?

தம்பி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கான பணிகளை செப்டம்பர் மாதம் முதல் தீவிரமாக செயல்படுத்த உள்ளார். மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி தம்பி விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் .

விஜய்யுடன் கூட்டணி சேர்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். தம்பி விஜய் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்

தலைப்பு செய்திகள்

நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை
நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
Embed widget