கோபாலபுரம் கோயில்! கலைஞரின் வீட்டில் தயாளு அம்மாளுடன் சந்திப்பு - ஆளுநர் தமிழிசையின் பரபர பயணம்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வரின் தாயார் தயாளு அம்மாளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமாகியவர் தயாளு அம்மாள். வயது மூப்பால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் தயாளு அம்மாளுக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், அவர் உடல்நலம் தேறினார்.
இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை வந்திருந்தார். சென்னை வந்த ஆளுநர் தமிழிசை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார். பின்னர், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு நேரில் சென்றார்.
#ஸ்ரீகிருஷ்ணஜென்மாஷ்டமி தினமான இன்று சென்னை,கோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2022
Offered Prayers at Sri Venugopala Swami Temple at Gopalapuram Chennai on the occasion of #KrishnaJanmashtami#Janmashtami2022 pic.twitter.com/elq1J2Qnbk
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.1/2 pic.twitter.com/sOkrLVg9fZ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2022
அங்கே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அவருடன் மு.க.ஸ்டாலினின் சகோதரி தமிழ்ச்செல்வி உடனிருந்தார்.
இதுதொடர்பாக, தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினின் சகோதரி தமிழ்ச்செல்வியை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : காதலியை நேரில் பார்க்க இப்படி ஒரு ஐடியா! புர்கா அணிந்து ஊருக்குள் சென்று சிக்கிய இளைஞர்!
இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.(2/2)@mkstalin
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2022
(File Photo) pic.twitter.com/KsIuOBVCa8
மேலும், அந்த புகைப்படத்துடன் கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்தபோத அவரை கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடியுடன் உடன் சென்றிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க : அடக்குமுறையால் அச்சுறுத்தும் ஸ்டாலின்... எங்கள் அடிமட்டத் தொண்டனும் பயப்பட மாட்டான்... அண்ணாமலை அறிக்கை
மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!