மேலும் அறிய

அடக்குமுறையால் அச்சுறுத்தும் ஸ்டாலின்... எங்கள் அடிமட்டத் தொண்டனும் பயப்பட மாட்டான்... அண்ணாமலை அறிக்கை

”குடும்ப ஆட்சியில் கோலாச்சிக் கொண்டிருந்த உங்களின் அடுத்த பரிமாணமே இந்த சர்வாதிகாரம். எங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டன் கூட உங்கள் அடக்குமுறை சர்வாதிகாரப் போக்கினைக் கண்டு அஞ்சமாட்டான்” - அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சிக்கு தங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கூட பயப்பட மாட்டார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரத மாதாக்கு மாலை அணிவித்தது குற்றமா..

பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல் துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். 

அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா?  பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, மாநில அரசின் முறையான, அனுமதி பெற்று, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது, பூட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தைத் திறந்து  நினைவிடத்துக்குள் சென்றார் என்ற காரணத்துக்காக ஒரு கொடுங்குற்றவாளியை நடத்தும் விதத்தில், மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்தும் வகையிலே, மாநில அரசு நடந்து கொள்வது என்பது ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்தும் சர்வாதிகாரம்.

'காலமும் காட்சியும் மாறும்’

அப்படி, பாரத மாதாவின் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால், அதை மீண்டும், மீண்டும் செய்ய,  நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம். 

சர்வாதிகாரி மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அடக்கு முறையை, அராஜகங்களை எல்லாம் தமிழ்நாடு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

குடும்ப ஆட்சியில் கோலாச்சிக் கொண்டிருந்த உங்களின் அடுத்த பரிமாணமே இந்த சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், காவல் துறையினரால் எங்களைத் துன்புறுத்தலாம். ஆனால் காலமும் காட்சியும் மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

’அடிமட்டத் தொண்டர்களும் அஞ்சமாட்டார்கள்'

எங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டன் கூட உங்கள் அடக்குமுறை சர்வாதிகாரப் போக்கினைக் கண்டு அஞ்சமாட்டான். நினைவில் கொள்ளுங்கள், யாரும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் உங்கள் சிம்மாசனம் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். உங்களை அந்தச் சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை, தமிழ்நாடு மக்களின் குரலாக, எங்கள் குரல் மணியாக ஓங்கி ஒலிக்கும். 

தற்போது இதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம், உடல் நலம் சீரடையும் முன்னர், மருத்துவர்கள் தடுத்தும், துன்புறுத்தி சிறைக்கு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கே.பி.ராமலிங்கம் கைது

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா நினைவாலயத்திற்கு, கடந்த வியாழக்கிழமை பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவிக்க சென்றனர்.

அப்போது நினைவாலயம் பூட்டு போடப்பட்டிருந்தால், நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்ததற்காக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை நாமக்கல், ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget